Parthiban Daughter Marriage

Parthiban Daughter : பார்த்திபன் – சீதாவின் மூத்த மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நடிகைகளாக வலம் வந்தவர்கள் பார்த்திபன் – சீதா ஆகியோர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து பெற்று கொண்டனர்.

பார்த்திபன் சீதா தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் கீர்த்தனாவிற்கு கடந்த வருடம் திருமணம் முடிந்தது. இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இவர்களின் மூத்த மகள் அபிநயாவுக்கும் திருமணம் முடிந்துள்ளது.

அபிநயாவை திருமணம் செய்து கொண்டவர் பழம் பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான நரேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.