Parking Movie Review
Parking Movie Review

பார்க்கிங் திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண்.

அதன் பிறகு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.

இவரது நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவுடன் ஒரு வீட்டிற்கு குடி வருகிறார். மனைவி கர்ப்பமாக இருப்பதால் கார் ஒன்றை வாங்குகிறார். இதே வீட்டில் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கு ஹரிஷ் கல்யாண் கார் விடுவதால் பைக் பார்க் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாக ஒருகட்டத்தில் கை கலப்பில் முடிகிறது. பிறகு எம் எஸ் பாஸ்கரும் பதிலுக்கு ஒரு காரை வாங்குகிறார். இந்த ஈகோ பிரச்சனையில் வென்றது யார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தின் கதைக்களம் :

இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எம் எஸ் பாஸ்கர் மிகவும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். சொல்ல போனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பை கொடுத்துள்ளனர்.

இந்துஜா வழக்கமான நாயகியாக வந்து போனாலும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்துள்ளார்.

சாம் சி எஸ் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஒரு ஒன் லைன் ஸ்டோரியை எடுத்து கொண்டு அதை மிகவும் திறம்பட கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ராம்குமார்.

REVIEW OVERVIEW
பார்க்கிங் விமர்சனம்
parking-movie-reviewமொத்தத்தில் பார்க்கிங் படு ஜோர்.