pariyerum perumal
சாதி அவலங்களை பற்றி பேசிய பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

Pariyerum Perumal movie got pondichery govt award – பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கிய 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.

சாதியின் கொடூரம், பிரிவினை, பாகுபாடு, ஆணவக்கொலைகள் பற்றி பேசிய இப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் கதிர், காயல் ஆனந்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து அதிர்ந்த ரஜினி – என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!

கடந்த வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் இப்படம் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்திற்கு எந்த விருதும் அறிவிக்கப்படவில்லை. இதை தமிழக இயக்குனர்கள் பலரும் கண்டித்திருந்தனர்.

pariyerum perumal2

இந்நிலையில், இப்படத்திற்கு புதுச்சேரி அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது.வருகிற 13ம் தேதி புதுச்சேரி முருகா தியேட்டரில் நடைபெறும் விழாவில் முதல்வர் நாராயணசாமி இந்த விருதை வழங்குகிறார்.

இயக்குனர் மாரிசெல்வராஜ் இந்த விருதை பெறுகிறார். பாராட்டு பத்திரத்துடன் ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

அன்று மாலை அந்த தியேட்டரில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.