Paravai Muniyamaa
பரவை முனியம்மா பாட்டி நேற்று மரணமடைந்து விட்டதாக தகவல் பரவிய நிலையில் நான் நலமுடன் இருக்கிறேன் என அவர் கூறிய வீடியோ சமுக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தூள் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா.

இவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் நேற்று காலமாகி விட்டதாக தகவல் ஒன்று வேகமாக பரவ தொடங்கியது.

இதனால் நேற்று முன்தினம் இவரை சந்தித்து பேசி இருந்த அபி சரவணன் பரவை முனியம்மா பாட்டி நலமுடன் இருக்கிறார், வதந்திகளை பரப்பாதீர்கள். நான் இன்று மாலை அவரை சந்தித்ததும் வீடியோ வெளியிடுகிறேன் என கூறினார்.

அவர் கூறிய படியே மீண்டும் பரவை முனியம்மாவை சந்தித்துள்ளார், பரவை முனியம்மா அவர்கள் பேசும் வீடியோ ஒன்றும் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.