பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? வெளியான புதிய தேதி.!!

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Parashakti movie Release Date Changed
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த பராசக்தி திரைப்படத்தை ஜனவரி பத்தாம் தேதி வெளியிட பட குழு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் அவரது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக போவதாக சொல்லப்படுகிறது. பொங்கல் ரேசில் கலக்கப்போகும் இந்த இரண்டு படங்கள் குறித்து உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Parashakti movie Release Date Changed