விஜய் டிவியில் இருந்து வேறொரு சேனலுக்கு மாறி உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதல் பாகத்தில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் சுஜிதா தனுஷ்.
தமிழ் தெலுங்கு என இரண்டிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. ஆனால் இது விஜய் டிவி இல்லை என்பது தான் ரசிகர்களுக்கு ஷாக்.
ஆமாம் சுஜிதா தனுஷ் அடுத்ததாக கலைஞர் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள கௌரி என்ற தொடரில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியல் குறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.