லட்சுமி அம்மா உடலை எடுக்கச் சொல்லி கிராமத்தினர் அழுத்தம் கொடுக்கின்றனர்.

Pandian Stores Episode Update 18.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். லஷ்மி அம்மாவின் மறைவு குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்தையை நேரில் பார்க்க வந்த ஐஸ்வர்யாவை வீட்டுக்குள் சேர்க்காமல் வெளியே நிற்க வைத்து விடுகின்றனர்.

அனைவரும் கண்ணன் வந்தால் தான் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர். ஆனால் ஊரார் நாளைக்கு திருவிழா இருப்பதால் 6 மணிக்குள் அடக்கம் செய்தாக வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். கண்ணன் வருவதற்குள் மற்ற வேலைகளை கவனிக்கலாம் என மற்ற சடங்குகள் நடத்தப்படுகின்றன.

லக்ஷ்மி அம்மா உடலை எடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் கிராமத்தினர்.. கண்ணன் வந்தானா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்.!! ‌

சடங்கில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா வந்தபோது அவரை கஸ்தூரி திட்டி வெளியே அனுப்பிவிடுகிறார். நேரம் கடந்தும் கண்ணன் திருச்சியில் இருந்து இன்னும் வரவில்லை.

உடலை எடுப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. அம்மா நம்மள விட்டு போய்ட்டாங்க என மூர்த்தி தனது இரண்டு தம்பிகளை கட்டி அணைத்து அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.

லட்சுமி அம்மா மரணத்தை வச்சுக்கிட்டு ஒரு வாரத்துக்கு மேல இப்படி போடுறீங்களே அநியாயமா தெரியலையா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.