தன் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவில் நடந்த மாற்றங்களால் வீட்டில் பிரச்சினை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pandian Stores Episode Update 05.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்காக தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. வீட்டில் அனைவரும் வந்து ஒன்று சேருகின்றனர்.

மீனாவின் அப்பா அம்மா வந்ததும் மீனாவிடம் தனியாக பேசுகின்றனர். குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க என்று கேட்க மீனா பாண்டியன் என்றுதான் பெயர் வைப்பார்கள் என கூறுகிறார். மேலும் குழந்தையை படத்தில் எதுவும் இல்லையே என கேட்க அந்த பழைய தொட்டில் எடுத்து வச்சு இருக்காங்க என சொல்கிறார்.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

ஆனால் தனத்தின் அண்ணா ஜகா புதிய தொட்டில் ஒன்றை வாங்கிவந்து அதில் தான் குழந்தையை போட வேண்டும் என கூறுகிறார். மூர்த்தியும் தனமும் கொஞ்சம் யோசிக்கின்றனர். பிறகு தனது தன்னுடைய அண்ணாவை தனியாக அழைத்து பழைய தொட்டிலில் தன் குழந்தையை போட வேண்டும் எனக் கூறியும் அதனை அவர் கேட்கவில்லை. தனத்தின் அம்மாவும் அது 50 வருஷ தொட்டில் அதில் குழந்தையை போட வேண்டாம் என கூறுகிறார்.

பிறகு தனம் உள்ள என் அம்மா மீனாவின் அம்மா மற்றும் தன்னுடைய அம்மா என மூவரையும் அழைத்து அத்தையோட இடத்தில இருந்து நீங்க தான் குழந்தையை தொட்டிலில் போட வேண்டும் என குழந்தையை அவர்கள் கையில் கொடுக்கிறார். குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க என கேட்க அப்பாவின் பெயர் தான் வைக்கப் போகிறோம் என மூர்த்தி சொல்கிறார். அது ஜாதக பெயராக இருக்கட்டும் கூப்பிட வேற ஏதாவது பெயர் வைக்கலாம் என தனத்தின் அம்மா சொல்ல நானும் கஸ்தூரியின் சில பெயர்களை குறித்து வந்துள்ளோம் என ஜகா கூறுகிறார்.

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review

இதனால் மீனாவின் அப்பா அம்மாவின் முகம் மாறுகிறது. மீனா ஜீவாவை பார்க்கிறார். கயலுக்கு செய்யக்கூடாது என கூறியதை எல்லாம் தனத்தின் குழந்தைக்கு செய்ய இருப்பதால் வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.