அப்பாவிடம் சண்டையிட்டு வீடியோ ஆதாரத்தால் திருடனை கையும் களவுமாக பிடித்துள்ளார் மீனா.

Pandian Stores Episode Update 03.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கஸ்தூரி கண்ணன் பணம் திருடிய விஷயத்தை வீட்டில் சொல்ல அதன் பிறகு கதிருக்கு அது சிக்கலாக மாறிய நிலையில் இந்த விஷயம் தெரிந்த மீனா நேராக அப்பாவின் கடைக்கு ஜீவாவை கூட்டிச் சென்றார்.

சக்தி எனப்படுவது யாதெனின்..

அப்பாவிடம் சண்டையிட்ட மீனா.. வீடியோ ஆதாரத்தால் கையும் களவுமாக சிக்கிய திருடன் - பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட் அப்டேட்

கண்ணன் தான் பணத்தை எடுத்தான் என எப்படி செல்கிறீர்கள் என கேட்க ஐஸ்வர்யா கிட்டதான் கல்லா சாவி இருந்தது. அவங்களை நம்பித்தானே கடையில விட்டுப் போனேன் அப்போ அவங்கள தவிர்த்து வேறு யார் எடுத்திருக்க முடியும் என கூறுகிறார். முதல்ல அன்னைக்கு நடந்தது முழுசா சொல்லுங்க என மீனா கேட்க ஜனார்த்தனன் நடந்த கதையை கூறுகிறார். நான் வரும்போது தான் கண்ணனும் டெலிவரி கொடுத்து விட்டு வருவதாக சொன்னான். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போய் எங்கே ஒளித்து வைத்துவிட்டு வந்திருக்கான் என கூறினார். அப்புறம் எப்படி அன்னைக்கு நைட்டே 15,000 பணத்தை அவன் எடுத்துட்டு வந்து கொடுப்பான் என சொல்ல அது கதிர் கொடுத்த பணம் என மீனா பதில் கூறுகிறார்.

அதற்கு அடுத்ததாக சிசிடிவி கேமராவை பார்த்த மீனா இது எப்போ போட்டது என கேட்க போன மாசம் போட்டது என கூற உடனே இதன் புட்டேஜ் பார்க்க வேண்டும் என மீனா கேட்கிறார். ஜனார்த்தனன் அதை எடுத்துக் கொடுக்க இதனைப் பார்த்த மீனா கடையில் வேலை செய்யும் வேறு ஒரே பையன் கல்லாவில் இருந்து பணத்தை திருடும் காட்சியை அவரிடம் காட்டுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தனன் உடனே அந்த பையனை அழைத்து பளார் பளார் என அறை விடுகிறார். அவங்கள வேலையை விட்டு போகச் சொல்லும் போதாவது சொல்ல வேண்டியதுதானே என திட்டுகிறார். இப்போ அவனை அடிச்சு என்ன புரோஜனம் கண்ணன் மேல போட்ட பழி மறைந்து போய்விடுமா என மீனா கோபப்படுகிறார். அவங்க புதுவீட்டுக்கு குடித்தனம் வந்ததுனால பணத்தேவை இருக்கும் என நினைத்துதான் அவன்தான் எடுத்திருப்பான் என சொன்னேன். எனக்கு இதையெல்லாம் பார்க்கணும்னு தோனல என மன்னிப்பு கேட்கிறார்.

அஜித்தே சொன்னாலும் நாங்க Thala-ன்னு தான் கூப்பிடுவோம் – Actor Sendrayan Exclusive Speech

அப்பாவிடம் சண்டையிட்ட மீனா.. வீடியோ ஆதாரத்தால் கையும் களவுமாக சிக்கிய திருடன் - பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட் அப்டேட்

பிறகு கல்லாவில் இருந்து 15 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்ட மீனா அவர் அப்பாவிடம் கொடுத்து எண்ண சொல்ல அவர் 15 ஆயிரம் இருக்கு என கூறினார். இது எங்களோட பணம் என மீனா சொல்லிவிட்டு ஜீவாவை கை பிடித்து கூட்டிக்கொண்டு வெளியே வருகிறார். மீனா செய்ததைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார் ஜீவா. பிறகு மீனாவுக்கு நன்றி கூறுகிறார். ‌‌‌‌‌

அதன்பிறகு கடைக்கு வந்த ஜீவா தன்னுடைய அண்ணனை தனியாக கூட்டி வந்து நடந்ததை கூறுகிறார். மீனா இப்படி எல்லாம் பண்ணுவாணு நான் எதிர்பார்க்கவே இல்லை என கூறுகிறார். மூர்த்தியும் மகிழ்ச்சி அடைகிறார். தனம் உங்கள சின்ன வயதிலிருந்தே தூக்கி வளர்த்தவர் அதனால அவளுக்கு நம்ம குடும்பத்து மேல பாசம் இருக்கும். முல்லை நம்ப சொந்தக்கார பொண்ணு அந்தப் பொண்ணுக்கும் பாசம் இருக்கும். ஆனா மீனா வேற குடும்பத்தில் இருந்து வந்த பொண்ணு. அந்தப் பிள்ளையும் நம்ம குடும்பத்து மேல பாசமா இருக்கிறதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. அந்தப் பெண்ணை கண் கலங்காம பார்த்துக்க வேண்டியது உன்னோட பொருப்பு என கூறுகிறார்.

அதற்கு அடுத்ததாக வீட்டில் ஜீவா மீனாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது நடந்ததை நீயே கதிரிடம் சொல்லு என கூறுகிறார். நானே சொன்னா பெருமை பேசுகிற மாதிரி இருக்கும் என மீனா சொல்ல நீ எப்பயும் செய்யறது தானே என நாசுக்காக ஜீவா கூறுகிறார். உடனே மீனா என்ன சொன்ன என கேட்க ஜீவா நீ சொன்னா நல்லா இருக்கும் என கூறுகிறார். அதன் பிறகு கதிர் வருகிறார். வந்தவுடனே அண்ணியைப் பற்றி கேட்க தூங்குறாங்க நான் வேணும்னா எழுப்பி கூட்டிட்டு வரவா என மீனா நக்கல் அடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கதிர் முல்லையை தேட அவங்க பின்னாடி துணி காய போட்டுட்டு இருக்காங்க. ஏன் கொழுந்தனாரே என் கிட்ட எல்லாம் பேச மாட்டீர்களா என கேட்க பேசலாமே என்ன பேசணும் என கேட்கிறார். அப்படியே மீனா கதிரை கொஞ்ச நேரம் கலாய்த்து விட்டு ஒரு நிமிஷம் இருங்க என உள்ளே சென்று பணத்தை எடுத்து வந்து கொடுக்கிறார். இது உங்க பணம் என கூறுகிறார்.

என்னுடைய பணம் என கதிர் கேட்க ஆமாம் நீங்க கண்ணனுக்கு கொடுத்த பணம். எங்கப்பா கடையில் இருந்து எடுத்துட்டு வந்தேன். அதுமட்டுமல்ல கண்ணன் அந்த பணத்தை திருடலனு நிரூபித்து விட்டேன். கடையில் இருக்க ஒரு பையன்தான் திருடி இருக்கான் என ஜீவா கூறுகிறார். பிறகு மீனா இந்தாங்க கொழுந்தனாரே பணத்தை பிடிங்க என கொடுக்க ஜீவா வாங்கிக்க டா என கூறுகிறார். இதனால நீ எவ்வளவு பேர் கிட்ட திட்டு வாங்கின என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட் முடிவடைகிறது.