இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம்.

Pandian Stores Dhanam Directs Hanshika : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூத்த மருமகளாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா தனுஷ்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க அறிமுகமான இவர் அதன் பின்னர் படங்களிலும் நடித்து வந்தார். எக்கச்சக்கமான சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவர் தனுஷுடன் இணைந்து விளம்பரப் படங்களில் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

தங்கம் வென்ற முன்னாள் கேப்டன் ‘ஜாம்பவான்’ சரண்ஜித் சிங் மரணம் : தலைவர்கள் இரங்கல்

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக இவர் நடிகை ஹன்சிகாவை வைத்து ஒரு விளம்பரப் படத்தை இயக்கியுள்ளார். இதுகுறித்த மேக்கிங் வீடியோக்களையும் ஹன்சிகா உடன் பணியாற்றிய அனுபவத்தையும் தனம் தன்னுடைய கதை கேளு கதை கேளு யூ ட்யூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சின்ன வயசுல இருந்தே Anirudh இப்படிதான் – அனிருத்தின் தந்தை பெருமிதம்! | HD