தங்கலான் திரைப்படம் குறித்து சிறப்பான தகவல்களை இயக்குனர் பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார்.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் போட்டியாளர்களை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித் இப்படம் தொடர்பாக பகிர்ந்து உள்ள தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதில் அவர், தங்கலான் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாகவும் இதுவரை KGF இடத்தில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் நடைபெறும் என்றும் மே மாதத்திற்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விடும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்ற சிறப்பு அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.