விடுதலை திரைப்படத்தின் ஒன்னோட நடந்தா பாடலின் ரிவ்யூ வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இளையராஜா இசையமைப்பில் தனுஷ் பாடி இருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஒன்னோட நடந்தா பாடல் கடந்த வாரம் வெளியானது. இணையதளத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்பாடல் குறித்து இளையராஜாவின் ரசிகர்கள் கூறியிருக்கும் கருத்துக்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.