
அமெரிக்காவை சேர்ந்த 66 வயதான முதியவரின் பெயர், ஜிம் புரூல். நூற்றுக்கணக்கில் ஸ்ட்ரா மற்றும் சிகரெட்களை வாயில் வைத்து பல உலக சாதனைகளை செய்தவர்.
2003 – ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 159 சிகரட்டுகளை புகைத்து, உலக சாதனை படைத்தவர். தற்போது, தனது சாதனையை தானே முறியடிக்க முயற்சி செய்துள்ளார்.
அதாவது , ஒரே நேரத்தில் 160 சிகரெட்களை வாயில் வைத்து, புகைத்து உலக சாதனை படைக்க முயன்றார்.
ஆனால், வயதான காரணத்தினால் அவரது வாயில் 130 சிகரெட்களே வைக்க முடிந்தது. எனவே உலக சாதனைக்கு முயன்ற அவரது முயற்சி தோல்வி அடைந்தது.