வலிமை திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாகிறது எனவும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Official Announcement of Valimai Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப் போனது. இதனையடுத்து இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டு இருந்தது.

இந்த நிலையில் படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.