Rashmika Mandanna
நடிகை ராஷ்மிகாவின் உணவு பழக்கம் பற்றி பேசி அவரை நிகழ்ச்சியிலேயே கடுப்பாக்கியுள்ளார் பிரபல தெலுங்கு ஹீரோ.

Nithin About Rashmika : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இடம் பிடித்து விட்டார் ராஷ்மிகா. இவரது நடிப்பில் அடுத்ததாக பீஷ்மா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஹீரோவாக நிதின் நடித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நிதினிடம் ராஷ்மிகா பற்றி யாருக்கும் தெரியாத விசியம் ஒன்றை கூறும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு நிதின் ராஷ்மிக்கா ஸ்நாக்ஸாக நாய் பிஸ்கட்டை சாப்பிடுவார் என கூற ராஷ்மிக்கா கடுப்பாகியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் அதனை சிரித்து கொண்டே மறைத்து விட்டார்.

மேலும் இது பற்றி ராஷ்மிகா ஒரு முறை தெரியாமல் சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார். தமிழில் இவர் சுல்தான் என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.