தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவை பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் மாலை 6.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்ப செய்ய உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேச போகிறார்? மெர்சல் இசை வெளியீட்டு விழாவை போல பட்டய கிளப்புவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.