தமிழ் புத்தாண்டு தின ரிலீஸில் இருந்து வெளியேறியுள்ளது யானை முகத்தான் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிகம் குறிப்பாக பண்டிகையின் நாட்களில் என்றால் அதிக அளவிலான திரைப்படங்கள் வெளியாகும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
அந்த வகையில் இந்த வருட தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் சினிமாவில் எட்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்து. அந்த படங்களில் ஒன்றுதான் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள யானை முகத்தான்.
ரெஜிஷ் மித்திலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தவிர்க்க முடியாத சில காரணங்களினால் இந்த படம் தமிழ் புத்தாண்டு தின ரிலிஸீல் இருந்து தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளனர்.