திட்டமிட்டபடி வலிமையை ரிலீஸ் ஆகும் என படக்குழு கூறியுள்ள நிலையில் சிலர் சமூக வலைதளங்களில் அஜித்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Nettisans Question to Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#rithika crying 😭 because of #vanibhojan

ஆனால் தற்போது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ‌‌

ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு; மற்றும் வெள்ளி, சனியில் கோவிலுக்கு செல்லத் தடை..

இருப்பினும் வலிமை படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளர் கூறி உள்ள காரணத்தினால் நெட்டிசன்கள் சிலர் அஜித் அவர்கள் ரசிகர்களின் நலன் தான் முக்கியம் என சொன்னது, வாழு வாழ விடு என சொன்னதெல்லாம் பொய்யா?

கொரோனா அதிகரித்து வரும் சமயத்தில் வலிமை படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாதா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் நிச்சயம் அஜித் அவர்கள் வலிமை படத்தின் ரிலீசை தள்ளி வைக்கச் சொல்லி தயாரிப்பாளரிடம் கூறுவார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.