Mugen Rao
விஜய் டிவி செய்த வேலையால் ரசிகர்கள் முகேனை வெறுக்க தொடங்கியுள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து டைட்டிலை தட்டி சென்றவர் முகேன் ராவ்.

இதுவரை முகேனை கொண்டாடி வந்த ரசிகர்கள் தற்போது விஜய் டிவி செய்த செயலால் வெறுக்க தொடங்கியுள்ளனர். அப்படியென்ன சாதிச்சிட்டாரு எனவும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

அதாவது விஜய் டிவி முகேன் பிக் பாஸ் டைட்டிலை வென்றதை வைத்து முகேனின் சாதனை பயணம் என ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸில் ஜெயித்தததற்காக சாதனை பயணமா? முகேன் மட்டுமில்லாமல் வேற யார் மலேசியாவில் இருந்து வந்திருந்தாலும் டைட்டில் அவர்களுக்கு தான் கொடுத்து இருப்பீர்கள், அது வியாபார யுக்தி என விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏன் ஒத்து கொள்கிறீர்கள் என முகேனையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.