கோட் படத்தை வாங்க பிரபல நிறுவனம் மதிப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது லியோ திரைப்படம். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். அதுமட்டுமின்றி பிரசாந்த், பிரபுதேவா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். பொதுவாக விஜய் படம் என்றாலே வியாபாரம் வேற லெவல் இருக்கும்.
படத்தை வாங்குவது யார் என பெரிய போட்டியே நடக்கும். ஆனால் netflix நிறுவனத்திடம் கோட் படத்திற்கு படக்குழு மிகப்பெரிய தொகையை கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தை வாங்க மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்திடம் OTT உரிமை விற்பனைக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.