Nerkonda Paarvai Producer’s Emotional Tweet | Thala AJith| Sri Devi | MOM | Boney Kapoor | Vidya Balan | Nerkonda Paarvai | Kollywood

நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அவருடைய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படம் தற்போது சீனாவில் வெளியாகிறது.

Nerkonda Paarvai Producer’s Emotional Tweet :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அஜித் மிருகம் போல மாறிவிட்டார் – பரபரப்பான கருத்தை சொன்ன முன்னணி இயக்குநர்!

இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் இவருடைய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படம் தற்போது சீனாவில் வெளியாகிறது.

இதுகுறித்து டிவீட் செய்த அவர், “ இது எனக்கொரு எமோஷனலான மொமண்ட். இந்த படம் சீன ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என கூறியுள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.