ஜெய்லர் திரைப்படத்தின் வெற்றியை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இடம்பெற்று இருப்பவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து வசூலை குவித்து வருகிறது. அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தற்போது திரையரங்கில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல் மந்திரி பினராயி என பலர் பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்ததை தொடர்ந்து இப்படத்தின் மாபெரும் வெற்றி குறித்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்தை செல்போனில் அழைத்து பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.