நமக்கு புடிச்ச மாதிரி படம் பண்ண ஹீரோ ஒத்துக்க மாட்டாங்க என நெல்சன் திலீப் குமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nelson DhilipKumar Interview Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நமக்கு புடிச்ச மாதிரி படம் பண்ண ஹீரோ ஒத்துக்க மாட்டாங்க.. விஜயை பற்றி சொன்னாரா நெல்சன் திலிப் குமார்? தீயாக பரவும் சர்ச்சை வீடியோ

இந்த நிலையில் தற்போது இது படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் வேறொரு படம் பற்றி இயக்குனர் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் உடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார்.

அப்போது நமக்கு பிடிச்ச மாதிரி படம் பண்ண ஹீரோ ஒத்துக்க மாட்டாங்க. கமர்சியல் வேற, நமக்கு ஒரு ஸ்டைல படம் பண்ணனும்னு ஆசை இருக்கும் ஆனால் அதுவும் கமர்ஷியல் சினிமாவும் டோட்டலாக டிராக் வேற என கூறியுள்ளார். நெல்சன் டிலிப்குமர் கூறியதைக் கேட்டு விக்னேஷ் சிவன் அவசரப்பட்டுடியே குமாரு என கிண்டலடிக்கிறார்.

நமக்கு புடிச்ச மாதிரி படம் பண்ண ஹீரோ ஒத்துக்க மாட்டாங்க.. விஜயை பற்றி சொன்னாரா நெல்சன் திலிப் குமார்? தீயாக பரவும் சர்ச்சை வீடியோ

இதனை பார்த்த ரசிகர்கள் அவர் தளபதி விஜய் தான் அவர் சொல்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.