அடங்காதே படத்திலிருந்து நீ இன்றி நானா என்ற பாடலை 6 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

Nee Indri Naana Video Song : தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அடங்காதே. இந்த படத்தில் ஆர் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

சண்முகம் முத்துசாமி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து நீ இன்றி நானா என்ற வீடியோ பாடலை இயக்குனர் சேரன், விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.