Thala 59 Nazriya

Nazriya Thala 59 Update : சத்தமில்லாமல் தல 59 படத்தின் அடுத்தடுத்த வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. இதனை நஸ்ரியா ட்வீட் ஒன்றில் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்,

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நஸ்ரியா, இயக்குனர் ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி மற்றும் ஷர்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருந்தன.

அதுமட்டுமில்லாமல் பிரபல செய்தியாளரான ரங்கராஜ் பாண்டேவும், AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் மூக்கையா வேடத்தில் நடிக்க உள்ளனர்.

படத்தின் பூஜை நடந்து முடிந்தவுடன் எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நஸ்ரியா தன்னுடைய பக்கத்தில் பக்கத்தில் விஸ்வாசம் ஷூட்டிங் குறித்து மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டை பார்த்த ரசிகர்கள் தல 59 ஷூட்டிங்கா? ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் நஸ்ரியா அதற்கு சரியான பதிலளிக்கவில்லை. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்பதை தான் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.