குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்ய சென்ற நயன்தாராவை ரசிகர்கள் டென்ஷன் ஆக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் மாபெரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தனது கணவன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து சமீபத்தில் கும்பகோணம் அடுத்த மேல்வழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோயிலுக்கு வழிபாடு செய்ய சென்றிருந்தார்.

அதனை அறிந்த அந்த ஊர் பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக நயன்தாராவை காண படை எடுத்து வந்ததால் அந்த இடத்தில் சற்று பதற்றம் நிலவிய இருந்தது. அதன் பிறகு காவல்துறையினரின் பாதுகாப்புடன் காமாட்சி அம்மன் கோயில் வழிபாட்டை முடித்த பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஐராதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

அதன் பிறகு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர் அப்போது தோள் மீது கை வைத்த மாணவியிடம் தொடாதீங்க என கோபப்பட்ட நயன்தாரா அதன் பிறகு திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய போது செல்போனில் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரிடம் முறைத்துக் கொண்டு திஸ் இஸ் தி லிமிட் என்னை படம் எடுக்காதீர்கள் மீறி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்று டென்ஷன் உடன் கத்தியுள்ளார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.