Vignesh Sivan Marriage
Vignesh Sivan Marriage

Vignesh Sivan Marriage : இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

தர்பார் படப்பிடிப்பில் ரஜினியை வெடித்து சிரிக்கவைத்த யோகி பாபு – முழு விவரம் உள்ளே!

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன.

இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

அப்படிப்பட்டவர் பெர்சனல் வாழ்க்கையிலும் பல சங்கடங்களை சந்தித்துள்ளார். இரண்டு காதல் முறிவுகளுக்கு பிறகு தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் உறவில் உள்ளார். இந்த காதல் திருமணத்தில் முடியும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இது உறுதியாகவுள்ளது. ஆம். நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நவம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாம்.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறும் என தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.