Darbar Updates
Darbar Updates

Darbar Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

முதல்வன் 2 குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஷங்கர் – என்ன சொன்னார் தெரியுமா?

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு யோகி பாபுவும் இப்படத்தில் இணைந்தார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மும்பை சுற்று வட்டாரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி யோகி பாபு இப்படத்தில் எப்படியாவது ஸ்கோர் செய்துவிட வேண்டும் என தீவிரமாக பணியாற்றி வருகிறாராம்.

ரஜினியிடம் ஓப்பனாக சீன் குறித்து டிஸ்கஸ் செய்வதோடு நிறைய இன்புட்டும் தருகிறாராம்.

சில சமயம் யோகிபாபு சொல்லும் காமெடியை கேட்டு ரஜினி விழுந்து விழுந்து சிரிப்பாராம். இப்படி படப்பிடிப்பை தினம்தினம் கலகலப்பாக வைத்து வருகிறாராம் யோகி பாபு.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.