அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியான நயன்தாராவின் நெகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் திருமணத்திற்கு பின்பும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்து வரும் இவர் தற்போது இரண்டு மகன்களுக்கு சிறந்த தாயாகவும் விளங்கி வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் நயன்தாராவின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

அதில் அவர், முதல் அன்னையர் தினத்தை கொண்டாடும் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் முதல் முறையாக குழந்தைகளை கையில் வாங்கிய போது எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதில் கையில் இருக்கும் குழந்தை நயன்தாராவின் முகத்தை முதல் முறையாக தொடும் போது சிரிப்புடன் அவர் கண்கலங்கி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த அழகான தருணத்தின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.