Nane Varuven First Look Poster

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Nane Varuven First Look Poster : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கர்ணன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் நானே வருவேன் எனவும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

இதோ பாருங்க