பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி திருநங்கை நமிதா மாரிமுத்து மீண்டும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Namitha MariMuthu ReEntry in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியை நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது 5-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் திருநங்கை நமிதா மாரிமுத்து. இவர் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் 5 ரசிகர்களுக்கு காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட் - வெளியான அதிரடி தகவல்
என் கேள்விக்கு என்ன பதில்? : கிறிஸ் கெயில் டென்சன்

ஆனால் ஒரே வாரத்தில் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறினார். இவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இவர் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! | Velavan Stores

அதாவது நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்துதான் வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவில்லை. அவருடைய உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கும் நுழைவார் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் நமிதா மாரிமுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.