Nadigaiyar Thilagam completes One Year :
பல சிறப்புகளை கொண்ட நடிகையர் திலகம் படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது.
ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.
இவருக்குள் இப்படியொரு திறமையா? என ஒட்டுமொத்த திரையுலகே ஆச்சரியப்படும் அளவு மெய் சிலிர்க்க வைத்தது கீர்த்தி சுரேஷின் நடிப்பு.
சாவித்ரியை தெரியாத தலைமுறைக்கும் சாவித்ரியின் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர்.
ஷங்கரை அழைத்து கதைக்கேட்ட விஜய் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
30 ஆண்டுகால பயணத்தை கொண்ட கதையில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஏற்ற முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியதோட ஒரு நாயகியை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்யலாம் எனும் நம்பிக்கையை விதைத்த படம் நடிகையர் திலகம்.
இப்படி பல சிறப்புகளை கொண்ட இப்படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட கீர்த்தி சுரேஷ், “ உங்கள் ஆசி இல்லாமல் இது எதுவுமே சாத்தியமில்லை சாவித்ரி அம்மா” என உருக்கத்துடன் பேசியுள்ளார்.