பிரம்மாண்ட படத்துடன் மோத உள்ளது தனுஷின் நானே வருவேன் திரைப்படம்.

Naane Varuven Clash With Ponniyin Selvan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தானு அவர்களின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

மேலும் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்துடன் தான் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் மோத இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.