Naan Sirithaal Press Meet
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சுந்தர் சி தயாரிப்பில் உருவாகி வரும் நான் சிரித்தால் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

Naan Sirithaal Team Press Meet : 

இதில் இப்படத்தின் இயக்குநர் ராணா பேசும்போது,

எனது பெற்றோர்கள், ரஜினிகாந்த் மற்றும் என்னுடைய இயக்குநர் ஷங்கர் இவர்கள் மூவருக்கும் நன்றி. ரஜினிகாந்த் என்னுடையை ‘கெக்க பெக்க’ குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம் 2.20 மணி நேரமாக மாறியது. இயக்குநர் ஷங்கர் செய்யும் பணியில் 5 சதவீதம் செய்தாலே நான் வெற்றிப் பெற்று விடுவேன்.

உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கிருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்னைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே இப்படம். ஆகையால், அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பாருங்கள். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறார், இப்படத்தை வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் T.முருகானந்தம்.

கதாநாயகி ஐஸ்வர்யா மேனன், சாரா, ஆஷிக், சுஜாதா, ‘படவா’ கோபி, கதிர், சத்யா, ‘எரும சாணி’ விஜய், இவர்களுடன் நடிகை குஷ்பூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ‘நான் சிரிச்சா வேற லெவல்’ என்ற பாடலை வெளியிட்டு பாடி, ஆடினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.