
வெறும் இரண்டு நிமிடத்தில் வாத்தி கம்மிங் பாடலை அடுத்து நொறுக்கி நான் ரெடி பாடல் சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோவாக நான் ரெடி என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோ நேற்று மாலை 6.30 மணிக்கு விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியானது.

இந்த பாடல் லிரிக்ஸ் வீடியோ இரண்டு நிமிஷத்தில் வாத்தி கம்மிங் பாடல் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. வெறும் ரெண்டு நிமிஷத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பத்து மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
