நான் ரெடி பாடல் யூடியூபில் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பாபுஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனிருத் இசையமைப்பில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடலான “நான் ரெடி” பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்லா வரவேற்பை பெற்று வைரலான நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக அப்பாடல் யூடியூபில் 100 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களைக் கடந்து சூப்பர் ஹிட் அடித்து வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.