‘மை லார்ட்’ படத்தின் கதை என்ன?: சசிகுமார் பதில்..

ராஜு​முரு​கன் இயக்கத்தில், சசிகு​மார் கதை​யின் நாயகனாக நடித்​திருக்​கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ர உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். யுக​பாரதி பாடல்​கள் எழு​தி​யுள்​ளார். பிப்ரவரி 13-ந்தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளார்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. சசிகுமார் பேசும்​போது,

‘இந்த படம் கோர்ட்டை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் கோர்ட் காட்​சிகள் பத்து நிமிடம்​தான் வரும். ஆனால், இந்​தக் கதை அதி​காரத்​தைப் பற்றியது. அதி​காரம் ஒரு எளிய, கடைக்​கோடி மனிதனின் கையில் கிடைத்​தால் அவன் அதை எப்​படிப் பயன்​படுத்​து​வான்? அவன் அந்த அதி​காரத்​துடன் என்ன செய்ய முடி​யும்? என்​ப​தையே இந்த படம் கேள்​வி​யாக முன்​ வைக்கிறது.

‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலை​யை​யும் முத்​துச்​சிற்பி என்ற நபரை​யும் குறிக்கிறது. அதனால்​தான் இந்த தலைப்பை தேர்ந்​தெடுத்​தோம். இந்த கதையை, ‘கதை​யில் எதை​யும் மாற்ற வேண்​டாம். கதை எப்படி​யிருக்​கிறதோ அப்​படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்​திரம் கொடுத்​தார் தயாரிப்​பாளர்.

இப்​படிப்​பட்ட நம்​பிக்கை ஒவ்​வொரு இயக்குநருக்​கும் கிடைப்​பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்​காக தயாரிப்​பாளர் அம்பேத்குமாருக்கு என் மனமார்ந்த நன்​றி’ என்றார். படக்​குழுவினருடன் இயக்​குநர்​கள் பாலா, லிங்​கு​சாமி, விஜய் மில்​டன், மாரி செல்​வ​ராஜ் உள்​பட பலர்​ கலந்துகொண்​டனர்.

sarathkumar in aazhi movie trailer release
sarathkumar in aazhi movie trailer release