
யாரும் திருமணம் செய்யக்கூடாது : ஆண்களுக்கு இசையமைப்பாளர் தமன் அட்வைஸ் ..!
யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று தமன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன். இவர் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாடகி ஸ்ரீவர்த்தினி என்பவரை திருமணம் செய்துள்ளார் இவருக்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து ஆண்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் திருமணம் செய்ய சரியான வயது குறித்த கேட்ட கேள்விக்கு இசையமைப்பாளர் தமன் இப்போது யாரும் திருமணம் செய்யக்கூடாது என நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் மிகவும் கடினமாக இருக்கிறது யாருக்கும் கீழ் இருக்க பெண்கள் விரும்பவில்லை அப்படி ஒரு பெண்கள் சமுதாயத்தை நாம் இழந்து விட்டோம் கொரோனாவுக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது பெண்கள் எல்லோரும் இண்டிபெண்டன்ட் ஆக இருக்க விரும்புகிறார்கள் நான் யாருக்கும் திருமணம் செய்ய பரிந்துரை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.
