Munthanai Mudichu Baby Secrets

முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜின் குழந்தையாக நடித்தது யார் என்பது குறித்த ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Munthanai Mudichu Baby Secrets : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். இவர் இதுவரை பல படங்களை இயக்கி நடித்துள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், தீபா, நலினிகாந்த், கோவை சரளா என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

அப்போதைய காலகட்டத்தில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வர வைத்த திரைப்படம் என்ற பெருமை முந்தானை முடிச்சு படத்திற்கு உண்டு. மேலும் அப்போதே 100 நாள் ஓடிய திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்ற திரைப்படம் இது. இந்த படத்தில் பாக்யராஜின் மகளாக சிறு குழந்தை ஒன்று நடித்திருக்கும். இந்தக் குழந்தை யார் என்பது பற்றி தற்போது தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தான்.

நடிகை சுஜிதா தமிழில் பூவிழி வாசலிலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் கிடைத்த வரவேற்பு காரணமாக இது இது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதிலாக தற்போது காவியா அறிவுமணி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முந்தானை முடிச்சு படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படம் மீண்டும் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. பாக்யராஜ் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.