Mundhanai Mudichu 2 Heroine Update

முந்தானை முடிச்சு படம் மீண்டும் ரீமேக்காக உள்ள நிலையில் அதன் நாயகி யார் என்பது தெரியவந்துள்ளது.

Mundhanai Mudichu 2 Heroine Update : தமிழ் சினிமாவில் இயக்குநர் கே பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் 1983 ஆம் ஆண்டு வெளியானது.

37 வருடங்களுக்கு பிறகு இந்த படம் தமிழில் மீண்டும் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்க உள்ளார்.

அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அக்கா-தங்கை வேடத்தில்… ரெண்டு டாப் ஹீரோயின் நடிக்கவிருக்கும் ஒரே படம்!! குதூகலத்தில் ரசிகர்கள்!

இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவைகளை இயக்குனர் பாக்யராஜ் தான் எழுத உள்ளார்.

ஜே எஸ் பி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத திரைப்படமான முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் இணைவது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முந்தானை முடிச்சு ரீமேக் படத்தின் ஹீரோ சசிகுமார்னு தெரியும்.. ஹீரோயினி யார் தெரியுமா?? - அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இதோ