லெட்ஸ் கேட் மேரிட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தோனி வெளியிட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட் (LGM)” என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடிக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 7 மணிக்கு தோனி அவர்கள் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் போஸ்டரை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.