நந்தினியை அசிங்கப்படுத்த நினைக்கும் வீரா, சூர்யா காப்பாற்றுவாரா? வெளியான மூன்று முடிச்சு,சிங்க பெண்ணே ப்ரோமோ..!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

moondru mudichu singappenne serial today promo update 04-02-26
moondru mudichu singappenne serial today promo update 04-02-26

நேற்றைய எபிசோடில் ஆனந்தியும் நந்தினியும் களத்தில் இறங்க, ராஜாங்கம் அணியில் இருந்து ஒருவர் வர அவரை இருவரும் சேர்ந்து அவுட் ஆக்குகின்றனர். அன்பு ரைடுக்கு போய் அவர்களை அவுட் ஆகிவிட்டு மீண்டும் கஷ்டப்பட்டு திரும்ப உடனே அன்பு அவுட் என்று சொல்லி எதிர் டீமுக்கு பாய்ண்ட் கொடுத்து விடுகின்றனர் ஏனென்றால் 30 செகண்ட் ஆயிடுச்சு என்று சொல்லுகின்றனர். ராஜாங்கம் வந்து சூர்யா டிமில் அனைவரையும் அவுட் ஆகிவிட்டு செல்ல நந்தினி ஆனந்தி மட்டும் இருக்கின்றனர். நந்தினி களத்தில் இறங்கி ராஜாங்கம் டீமை மொத்தமாக அவுட் ஆக்கி நண்பர்கள் அணியை ஜெயிக்க வைக்க அனைவரும் சந்தோஷப்படுகின்றனர் சூர்யா சந்தோஷத்தில் நந்தினியை தூக்கி சுத்த அன்பு ஆனந்தியை தூக்கி சுத்துகிறார் பிறகு குடும்பத்தினரும் சந்தோஷப்படுகின்றனர். ராஜாங்கம் அணியினரை வெறுப்பேற்றுவதுபோல அனைவரும் அவர்களை சுற்றி டான்ஸ் ஆடுகின்றனர். இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து கபடியில் ஜெயித்த விஷயத்தை பற்றி பேசுகின்றனர். அருணாச்சலம் எல்லா கிரெடிட்சும் நந்தினிக்கு ஆனந்திக்கும் தான் என்று சொல்லுகிறார். வழக்கம்போல் சுந்தரவல்லி பேச, நந்தினியும் ஆனந்தியும் வந்து விடுகின்றனர். இது ஒருத்தருக்கு மட்டும் வந்த வெற்றி கிடையாது இந்த குடும்பத்துக்கான வெற்றி என்று நந்தினி சொல்லுகிறார்.

எல்லோரும் மோரெடுத்துக்கோங்க என்று சொல்ல மறுபடியும் மோரா என்று அசோகன் கேட்ட இதுல எதுவும் கலக்கல மசாலா மோர் தான் குடிங்க என்று சொல்ல ஆமா களத்துல நின்னு ஆடிட்ட பாரு அதனால முதல்ல குடி என்று சூர்யா சொல்ல உடனே அன்பு பழக்கமே இல்லாம களத்துல நின்னு ஆடுறதும் ஒரு தைரியம் வேண்டும் என்று சொல்ல வந்ததுல இருந்து நீதான் அன்பு என்ன புரிஞ்சிக்கிட்டு இருக்க ஐ லவ் யூ என்று சொல்ல குடும்பத்தினர் முழிக்கின்றனர். உடனே டங் ஸ்லிப் ஆயிடுச்சு. ஐ லைக் யூ என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர். ஊர் பெரியவர்கள் வந்து எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்க போல என்று சொல்ல ஜெயித்த சந்தோஷம்தான் என்று சொல்ல, இது அதுவுமில்லாம உங்க மருமகளோட ஆட்டத்தை பார்க்கணுமே அந்த ராஜாங்கம் மேலே ஏறி வந்தாங்கல்ல அந்த அம்மன் மாதிரி இருந்தது என்று சொல்லுகிறார். ராஜாங்கத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கணும் என்று சொல்ல அருணாச்சலம் வேண்டாம் என சொல்ல சூர்யாவும் மகேஷும் எதுக்கு தண்டனை வேண்டானு சொல்றீங்க என்று சொல்ல, இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என அருணாச்சலம் சொல்லுகிறார். திருவிழா நல்லபடியா முடியட்டும் என்று சொல்ல திருவிழாவை நாங்கள் பார்த்துகிறோம் நாங்க ஐந்து சிங்கம் இருக்கோம் என்று சூர்யா சொல்லுகிறார்.

உடனே திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்கப் போவதாக சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றன. நீங்கதான் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கணும் என்று சொல்ல, அனைவரும் கிளம்பி விடுகின்றனர். நம்ம எல்லாத்துக்கும் சேர்த்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட போறோம் என்று சொல்லி சூர்யா அனைவரையும் அழைத்துச் சொல்கிறார். ஆடலும் பாடலும் நிகழ்ச்சியும் தொடங்க பொதுமக்கள் பெரியவர்கள் என அனைவரும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உடனே சூர்யா ,மகேஷ் ,அன்பு, நந்தினி, ஆனந்தி, மித்ரா அசோகன் மாதவி என அனைவரும் வந்து டான்ஸ்சை ரசித்துப் பார்க்கின்றனர். அடுத்து யார் ஆடப்போறது என்று கேட்க அவர் சூர்யா அன்பு மகேஷ் ஆடப்போறான் என்று சொல்ல சூர்யா அதிர்ச்சி அடைகிறார். இவங்கதான் ஜோடி ஜோடியா வந்திருக்காங்க இவங்க ஆட்டத்தை பார்க்க வேண்டாமா ஊர் மக்களே என்று சொல்ல அவர்களும் ஆடனும் என்று சொல்லுகின்றனர். உடனே அனைவரும் ஆட சம்மதித்து விட்டு ரெடி ஆவதற்காக செல்கின்றனர். கொஞ்ச நேரத்தில் ராஜாங்கம் வந்து இதையெல்லாம் பார்த்து கடுப்பாகி நிற்கிறார். அந்த நந்தினி உன்ன மிதிச்சிட்டு போனா உனக்கு அசிங்கமாக இல்லையா பார்க்கும்போதே ஆத்திரமா வருது என்று கோபப்படுகிறார்.

இங்கிருந்து நம்ம போகலாம் என்று சொல்ல, அவங்களுக்கு பயந்து என்ன போக சொல்றியா என்று சொல்ல, இப்போதைக்கு நம்மளுக்கு டைம் சரியில்லை என்று சொன்னவுடன் வீட்லயும் மரியாதை இல்ல ஊர்லயும் மரியாதை இல்லை. எல்லாத்துக்கும் காரணம் இந்த ரெண்டு குடும்பம்தான் அவங்களை பழிவாங்கியே ஆகணும் என்று சொல்லுகின்றனர். இப்பவே இந்த இடத்திலேயே அவங்கள அசிங்கப்படுத்துற மாதிரி ஏதாவது செய்யணும், அதுவும் அந்த சுந்தரவல்லி குடும்பத்தை அசிங்கப்படுத்தனும் அதுவும் குறிப்பா அந்த நந்தினியை ஏதாவது அசிங்கப்படுத்தணும் சுந்தரவல்லியோட கௌரவத்தை காவு வாங்கணும் இரண்டாவது அவங்க இந்த ஊர் பக்கமே வரக்கூடாது என்று சொல்ல, சொல்லிட்டேன்ல அண்ணே நான் பாத்துக்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு ஆனந்தியும் அன்புவும் டான்ஸ் ஆடுகின்றனர். அடுத்ததாக மித்ராவும் மகேஷும் ஆடுகின்றனர். உடனே சூர்யாவும் நந்தினியும் கலக்கலாக டான்ஸ் ஆடுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து கடைசியாக அசோகன் மற்றும் மாதவி இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர்.

அந்த நேரம் பார்த்து நந்தினி எழுந்து போக ஆனந்தி நான் வரட்டுமா என்று கேட்க வேண்டாம் என சொல்லுகிறார் சூர்யாவும் நான் வரட்டுமா என்று கேட்க வேண்டாம் இப்போ வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்கு செல்கிறார். இதனை வீரா கவனித்து விட்டு யாரும் வராத சமயமாக பார்த்து உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி பாத்ரூமில் போக இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட வீரா யாருக்கும் தெரியாமல் பாத்ரூமுக்குள் சென்று விடுகிறார் மறுபக்கம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி அசோகனும் மாதவியின் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க அனைவரும் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர் நந்தினி ரொம்ப நேரமாக வராமல் இருக்க சூர்யா யோசித்து கொண்டு இருக்கிறார் மறுபக்கம் நந்தினி பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தவுடன் வீரா வெளியே நிற்பதை பார்த்து நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க இது லேடிஸ் பாத்ரூம் என்று சொல்ல உடனே நந்தினி என் புடவை முந்தானையை பிடிக்கிறார். விடுடா விடுடா என்று நந்தினி எடுக்கிறார். என் புருஷனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்று சொல்ல சூர்யா சந்தேகப்பட்டு பாத்ரூமுக்கு வெளியில் வந்து நந்தினி என கூப்பிட சத்தம் கேட்ட நந்தினி திரும்பிப் பார்க்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu singappenne serial today promo update 04-02-26
moondru mudichu singappenne serial today promo update 04-02-26