சூர்யாவுக்கு கண்ணில் வந்த எரிச்சல், நந்தினி செய்த வைத்தியம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 29-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 29-04-25

நேற்றைய எபிசோடில் புனிதா வீட்டுக்கு கோபமாக வந்து உட்கார வீட்டில் இருப்பவர்கள் என்னாச்சு சாப்பிட்டிருச்சா அக்கா என்று கேட்க புனிதா எதுவும் பேசாமல் இருக்க, ரஞ்சிதா எதுக்கு உம்முன்னு இருக்க அக்கா கிட்ட திட்டு வாங்கினியா என்று கேட்க புனிதா கோபமாக எழுந்து செல்ல அம்மாச்சி கூப்பிடுகிறார். உடனே அம்மாச்சி இடம் புனிதா கோபப்பட்டு பேச, சிங்காரம் பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேசாத புனிதா என்று சொல்ல அங்க என்னமோ நடந்திருக்கு என்று அம்மாச்சி சொல்லுகிறார். என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க என்று சொல்ல, என்ன சொல்ல சொல்ற அங்க போய் நான் வெளியவே நின்னு அசிங்கப்பட்டு வந்ததை சொல்ல சொல்றியா என்று கேட்க என்ன நடந்தது என்று குடும்பத்தினர் கேட்க புனிதா அங்கு நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லுகிறார். சிங்காரம் சின்னையா கீழ கொட்டின சாப்பாடு சாப்பிடும் போது எதுவும் சொல்லலையா என்று கேட்க அக்கா எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கல என்று சொல்லுகிறார்.

உடனே அம்மாச்சி இந்த மாதிரி பொம்பள கோபப்பட்டா குடும்பத்துக்கே நல்லது இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட மறுபக்கம் நந்தினி புனிதாவை நினைத்து வருத்தப்பட, அந்த நேரம் பார்த்து விஜி போன் போடுகிறார். நந்தினி டல்லாக பேச, என்னாச்சு நந்தினி ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். நான் இங்கே இருக்கிறது யாருக்கும் பிடிக்கல, அப்படியே போகணும்னு நினைச்சாலும் ஐயாவும் சூரியா சாரும் என்னை அனுப்ப மாட்டேங்கிறாங்க, என்ன கஷ்டப்படுத்தினால் பொறுத்துக்கிட்டு போறேன் ஆனா என் குடும்பத்தையும் சேர்த்து கஷ்டப்படுத்தறாங்க என்று சொல்ல அவங்கள என்ன பண்ணாங்க என்று கேட்க பிறகு நந்தினியும் சுந்தரவல்லி நடந்து கொண்ட விஷயத்தை விஜியிடம் சொல்லுகிறார். சரி விடு நந்தினி சூர்யா அண்ணன் தான் உனக்கு சப்போர்ட்டா இருந்திருக்காரு என்று சொல்ல அவர் கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் அவங்க அம்மாவை வெறுப்பேத்திக்கிட்டு இருக்காரு, மத்தவங்கள என்ன என்னமோ அவங்க சொத்தை கொள்ளையடிச்சு போறதுதான் நினைச்சுகிட்டு இருக்காங்க என்ன மாதிரி ஒரு வாழ்க்கை வேற யாருக்கும் அமையக்கூடாது என்ற சொல்லுகிறார்.

அதற்கு விஜி இதெல்லாம் இருக்கட்டும் சூர்யா அண்ணனுக்கு நீ பாசம் இல்லன்னு நினைக்கிற ஒரு விஷயம் சொல்லு உங்க ஊர்ல பிரச்சனை என்றது சூர்யா அண்ணன் கிட்ட சொன்னியா இல்ல இல்ல அப்புறம் அருணாச்சலம் ஐயா சூர்யா சார் கிட்ட சொன்னாரா இல்லல்ல அவர் எப்படி வந்து உங்க குடும்பத்துக்காக நின்னாரு அவர் உங்க குடும்பத்து மேல அக்கறை இல்லாமையா இருக்காரு என்று கேட்டு நந்தினிக்கு ஆறுதலாக பேசி போனை வைக்கிறார். மறுபக்கம் சூர்யா விவேக்கிற்கு போன் போட்டு முக்கியமான விஷயம் நம்ப எப்பவுமே மீட் பண்ற இடத்துக்கு வந்துடு என்று சொல்லி ஃபோனை வைக்க அசோகன் எதிரில் வந்து நின்று, நான் ரொம்ப பாவமா இருக்கேன் என்று சொல்ல சூர்யா எதுவும் சொல்லாமல் பார்க்க அப்படித்தான் இருக்க வந்து கார்ல ஏறு என்று கூப்பிட்டுச் செல்ல சுந்தரவல்லி இதை மேலே இருந்து கவனித்து மாதவியிடம் வந்து என்ன அதிசயமா இருக்கு மாப்பிள்ளையை சூர்யா கூட்டிட்டு போறான் என்று சொல்ல நான் தான் பேச சொன்னேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து, ரேணுகா ஒரு செயினை எடுத்துக் கொண்டு வந்து மாதவியிடம் கொடுக்க இந்த செயின் காணாமல் போயிருந்தது ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் என்று சொல்ல எங்க இருந்தது என்று மாதவி கேட்க, மாதவி அம்மா ரூம் ஓட பெட்டுக்கு கீழ இருந்தது என்று சொல்லுகிறார்.

இதிலிருந்து என்ன தெரியுது இவ்வளவு நாளா வேலை செய்றவங்களோட லட்சணம் என்னன்னு தெரியுது என்று நந்தினி பார்த்து சொல்லுகிறார். நீ இதே மாதிரி நேர்மையா இருந்ததுனால உனக்கு ஆயிரம் ரூபாய் இன்கிரிமெண்ட் தரேன் என்ன சொல்லி அனுப்பி விடுகிறார்.விவேக் மற்றும் சூர்யா குடித்திருக்க, அசோகனை அழைத்துக் கொண்டு, சூர்யாவிடம் இருந்து ஏமாற்றி ஆர்டரை வாங்கிய ஆபீசுக்கு வந்து அலப்பறை செய்கிறார். பிறகு ஓனரை அழைத்து உன்ன நாக்க புடுங்குற மாதிரி கேட்கணும் என்று சொல்லி, அந்த குக்கர் கம்பெனியோட ஆர்டர் எங்களுக்கு தான் கிடைத்திருக்க வேண்டியது நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்ததுனால ஏமாத்திட்டியா நீ என்னமோ என்ன கொன்னுடுவேன்னு மிரட்டி தான் என் மாமா கிட்ட ஆர்டர் வாங்கினாயாமே இவன்லாம் ஒரு ஓனரா என்று அசோகனை பார்த்து கேட்கிறார்.

என்ன கொலை பண்ணிடுவேன்னு சொன்னாயாமே எங்க என் மேல கை வை என்று வம்பு இழுக்கிறார். உடனே விவேக் என் மச்சான் மேல நீ கை வைப்பியா என்று மிரட்ட, ஆளுங்கள கூட்டிட்டு வந்து மிரட்டுரியா சூர்யா என்று கேட்க இந்த ஒரு வாட்டி தான் மிரட்டுற அடுத்த வாட்டி செஞ்சிடுவேன் என சொல்லுகிறார். உன் கம்பெனிய காப்பாத்த வேண்டியது என்னோட வேலை இல்ல என்னோட கம்பெனிக்கு என்ன தேவையோ அதை தான் நான் பண்ண முடியும் என்று சொல்ல அதற்கு சூர்யா இந்த ஒரு ஆர்டர் மட்டும்தான் எடுத்திருக்க இனி வர மொத்த ஆர்டர் எடுத்து உன் கம்பெனியை காலி பண்றேன்னா இல்லையா என்று பாரு என்று சவால் விட, தொழில்ல போட்டு இருக்க தான் செய்யும் முதல்ல நீ அடுத்த டெண்டர்ல ஜெயிக்கிறியான்னு பாரு என்று சொல்ல, சூர்யாவை அங்கிருந்து விவேக் அழைத்து சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி சூர்யா சார் சூர்யா சார் என கூப்பிட்டுக் கொண்டே வர சூர்யா போதையில் இருக்க முடியாமல் நந்தினியை கட்டிப்பிடித்து விடுகிறார். நந்தினி சூர்யாவை நிற்க வைக்க பார்க்க அவர் முடியாமல் நந்தினி மீது சாய்ந்து கொண்டே இருக்க ஒரு வழியாக பெட் மீது உட்கார வைக்கிறார். தேங்க்யூ நந்தினி என்ற சொல்ல, நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும் என்று சொல்லுகிறார். என்ன விஷயம் என்று கேட்க நீங்களும் ஐயாவும் எங்க குடும்பத்துக்கு செய்யறதுக்கு டெய்லியும் நூறு நன்றி சொல்லணும் என்று சொல்ல என்ன நந்தினி செண்டிமெண்டா என்று கேட்டுவிட்டு பேச நந்தினி, உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று போக எனக்கு வேண்டாம் நந்தினி வயிறு ஃபுல்லா இருக்கு என்று சொல்லுகிறார். எதுக்கு சார் கீழ விழுந்த சாப்பாடு சாப்பிட்டீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என்று சொல்ல நான் உனக்காக சாப்பிடல நந்தினி என்று சொன்னவுடன் நந்தினியின் முகம் மாறுகிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவின் கண்கள் எரியுது என்று சொல்ல நந்தினி கண்களை ஊதி விடுகிறார். என்ன பண்ற நந்தினி என்று கேட்க, எங்க ஊர்ல எல்லாம் இப்படித்தான் ஊதுவாங்க உங்களுக்கு உறுத்தல் போயிடுச்சா என்று கேட்க சூர்யா இல்லை என்று சொல்லுகிறார். இன்னும் அப்படியேதான் இருக்கு என்று சூர்யா கையை கண்கிட்டு எடுத்துக்கிட்டு போக நந்தினி கண்ணை திறந்து பார்த்து செவந்து இருக்கு என்று சொல்லுகிறார்.

பிறகு நந்தினி முந்தானையில் வாயை வைத்து ஊதி சூர்யாவின் கண்ணில் வைத்து வைத்து எடுக்கிறார் பிறகு சூர்யாவிற்கு எரிச்சல் குறைய என்ன பண்ண நந்தினி என்று கேட்க இது எங்க ஊரோட நாட்டு வைத்தியம் என்று சொல்லுகிறார். சூப்பர் நந்தினி கைவசம் பல விஷயம் வச்சிருக்கியே என்று சொல்ல இப்போ ஓகேவா சார் என்று கேட்டுவிட்டு நான் போய் அம்மாச்சிய பாத்துட்டு வரேன்னு சொல்லி கிளம்புகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 29-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 29-04-25