அர்ச்சனா மீது சந்தேகப்படும் சூர்யா, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 28-05-25
Moondru Mudichu Serial Today Promo Update 28-05-25

நேற்றைய எபிசோடில் விஜி மற்றும் நந்தினி இருவரும் இடியாப்பம் இட்லி செய்து கொடுக்கும் கடைக்காரர் உணவுத்துறை அதிகாரிகளுடன் வீட்டுக்கு வருகின்றனர். இவங்க எல்லாம் யாரு என்று விஜி கேட்க, கடைக்காரர் கோபப்பட்டு பேசுகிறார். உங்களுக்கு வேலை கொடுத்த பாவத்துக்கு நானும் குற்றவாளியா இருக்கேன் என்று சொல்ல, உணவுத்துறை அதிகாரிகள் நீங்க செஞ்சு கொடுத்த இட்லி இடியாப்பம் சாப்பிட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காங்க உங்க வீட்டு சோதனை பண்ணனும் என்று சொல்லுகின்றன. உங்களால தான் என் தொழில் போயிடுச்சு உங்க ரெண்டு பேர சும்மா விடமாட்டேன் என்று கடைக்காரர் மிரட்ட உணவுத்துறை அதிகாரிகள் விஜி வீட்டை சோதனை செய்கின்றனர். பிறகு அங்கு இருக்கும் மாவுகளை லேப் டெஸ்ட்க்கு கொடுத்து விடுகின்றனர்.

கொஞ்ச நேரத்தில் ரிசல்ட் வந்தவுடன் கெமிக்கல் பாய்சன் கலந்திருக்கு என்று வந்துவிட, விஜி நாங்க அப்படி பண்ணல என்று சொல்ல உங்க கூட வேலை செஞ்ச அவங்களோட வீடு எங்க இருக்கு என்று விசாரித்து விட்டு விஜியை அழைத்துக்கொண்டு போக வழியில் விவேக்கும் வர அவரையும் அழைத்துக் கொண்டு சுந்தரவல்லி வீட்டுக்கு வருகின்றனர். நந்தினி நம்ம எல்லாமே பார்த்து பார்த்து தானே பண்ணனும் அது எப்படி இது மாதிரி ஆகும் நம்ம செஞ்சதா இருக்காது என்று மனதில் நினைத்துக் கொள்கிறார்.

மறுபக்கம் சுரேகா காஷ்மீர் டூர் போகலாம் என்று சொல்ல, அருணாச்சலம் முதல்ல படிக்கிற வேலையை பாரு என்று சொல்லுகிறார். குடும்பத்தினர் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அதிகாரிகள் வீட்டுக்கு வருகின்றனர். காலிங் பெல் அடிக்க மாதவி வந்து பார்த்து விசாரிக்க உணவு பாதுகாப்பு துறையிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொல்ல மாதவி உள்ளே அழைத்து வர சுந்தரவல்லி எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுகிறார். முதலில் நந்தினி என்றது யாரு என்று கேட்க சுந்தரவல்லி வேலைக்காரி என்று சொல்ல அருணாச்சலம் இந்த வீட்டோட மருமக என்று சொல்லுகிறார். இந்த வீட்டோட மருமகளா இருந்துகிட்டு எதுக்கு இட்லி இடியாப்பம் வைக்கணும் என்று கேட்க, விஜி நடந்த விஷயங்களை அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். நாங்க எந்த கெமிக்கல் பவுடரும் கலக்கல என்று சொல்ல, இதுக்காக தான் வந்திருக்கும் கேட்டுட்டீங்களா என்று சொல்லுகிறார். இப்போதைக்கு 60 பேர் ஹாஸ்பிடலில் இருக்காங்க அவங்களுக்கு ஏதாவது ஆனா உங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி ரிமாண்ட் பண்ணிடுவோம் என்று சொல்லி வார்னிங் கொடுக்கிறார். பிறகு இருவரிடமும் ஸ்டேட்மென்ட் எழுதி கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர். தேவைப்பட்டால் மீண்டும் வருவோம் என சொல்லிவிட்டு கிளம்பி விடுகின்றனர்.

உடனே சுந்தரவல்லி போதுமா சந்தோஷமா திருப்தியா இப்போ உங்களுக்கு இவ இந்த வீட்டிலிருந்து இட்லி இடியாப்பம் செய்ய போக கூடாதுன்னு சொன்னேனே யாராவது கேட்டீங்களா அதிகாரிங்க வீட்டுக்கு வந்து இருக்காங்க நாளைக்கு போலீஸ் வரும் அரெஸ்ட் பண்ணுவாங்க எல்லாத்தையும் பாருங்க என்று கோபப்படுகிறார். பட்ட கடனை அடைக்க இவ எல்லாத்தையும் பண்ணிட்டா நாளைக்கு இது எங்க போய் நிக்க போதுனு மட்டும் பாருங்க இன்னைக்கு கெமிக்கல் கலப்பா நாளைக்கு வேற ஏதாவது கலப்பா எல்லாத்துக்கும் என் மானம் தான் போகணுமா என்று கோபப்பட விவேக் நந்தினி எதுக்கோ காரணம் இல்ல இவங்க இப்படி பண்ண மாட்டாங்க என்று சொல்ல நீங்க பண்ற கூட்டு களவாணி தான எல்லாம் எனக்கு தெரியாதா என் பையனோட பிரண்டுன்றதுனால தான் என் அமைதியா இருக்கேன் இல்லன்னா என்னைக்கோ அடிச்சு துரத்தி இருப்பேன் என்று திட்டுகிறார் அந்த நேரம் பார்த்து சூர்யா வீட்டுக்கு வர, நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். ஏதாவது பிரச்சனையா என்று கேட்க சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் சொல்லுங்க உங்க பையன் கிட்ட என் மருமக சமைச்ச இட்லியை சாப்பிட்டு அறுபது பேர் ஹாஸ்பிடல்ல இருக்காங்கன்னு என்று சொல்ல அப்போ இதெல்லாம் உண்மையா என்று சூர்யா கேட்க, விஜி என்ன ஆச்சு என்று கேட்கிறார். நீங்க நல்லா தானே சமைப்பீங்க என்று கேட்க ஆமா எல்லாமே பார்த்து தான் வாங்கணும் ஆனா ஏதோ கெமிக்கல் பவுடர் கலந்து இருக்கிறதா சொல்றாங்க என்று சொல்லுகிறார்.

மாதவி நீங்க கலக்கலனா உங்க வீட்டு மாவுல எப்படி வந்தது என்று கேட்கிறார். ஆனால் சூர்யா நீங்க சமைக்கிறதுல எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது நடுவுல யாராவது வந்தாங்களா என்று கேட்க ஒருத்தவங்க வந்தாங்க அந்த அர்ச்சனா என்று சொல்லுகிறார். அர்ச்சனாவா என்று கேட்க ஆமாம் அவங்க நான் விஜி அக்கா வீட்டுக்கு போகும்போது சமைக்கிறத பாக்கணும்னு சொன்னாங்க அதனால கூட்டிட்டு போனேன் என நந்தினி சொல்லுகிறார்.

இது கண்டிப்பா அர்ச்சனாவோட வேலையா தான் இருக்கும் என்று சூர்யா சொல்ல, அவங்க போகும்போது சாப்பிட வாங்கிட்டு போனாங்க என்று சொல்ல அவ கொஞ்சம் தூரத்துல போய் குப்பையில போட்டு இருப்பா என்று சொல்லி அர்ச்சனாவுக்கு போன் போட அவர் தோழியுடன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருப்பதாக அவரது தோழி சொல்ல இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு கண்டுபிடிக்கிறேன் என நந்தினியை அழைத்துச் செல்கிறார். காரில் போகும்போது அவங்க மேல எந்த தப்பும் இருக்காது என்று சொல்ல, நீ ஒன்னும் அப்பாவியாகவே இருக்க இதுதான் உன் பிரச்சனை ஒருத்தரை நம்பிட்டேன்னா அவங்கள கண்மூடித்தனமா நம்புற எப்ப எல்லாம் அவ வீட்டுக்கு வராலோ அப்ப எல்லாம் பிரச்சனை நடக்குது. ஆனா உனக்கு மட்டும்தான் அவ மேல சந்தேகமே வர மாட்டேங்குது என்று சொல்லுகிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினியும் சூர்யாவும் ஹாஸ்பிடலில் வந்து பார்க்க அர்ச்சனா அட்மிட் ஆகி இருக்கிறார். அந்த அர்ச்சனா ஏதோ பிராடு வேலை பண்றா இந்த பிரச்சனைக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு என்று சூர்யா உறுதியாக சொல்லுகிறார்.

பசி என்று ஆசையா சாப்பிட வந்தவங்களுக்கு உடம்புக்கு முடியல எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என்று நந்தினி வருத்தப்பட்டு அருணாச்சலத்திடம் சொல்ல விஜி போன் போட்டு அந்த டெல்லி ஓட ஆளுங்க வந்து நம்மள அங்க பாக்க சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் இதனால் நந்தினி அதிர்ச்சி அடைகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 28-05-25
Moondru Mudichu Serial Today Promo Update 28-05-25