நந்தினிக்கு வந்த சந்தேகம், கோபப்பட்ட மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு சந்தோஷத்தில் கல்யாணம் தலைக்கால் புரியாமல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தேடிக்கொண்டிருக்க அருணாச்சலம் என தேடிகிட்டு இருக்கேன் என்று கேட்கிறார். உங்களுக்கு விஷயம் தெரியாதா? சின்னையா நந்தினி அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனார் இல்ல அங்க செக் பண்ணி பார்த்ததில்லை நந்தினி அம்மா கர்ப்பமா இருக்குறதா சொல்லி இருக்காங்க அம்மா பாட்டி ஆயிட்டாங்க நீங்க தாத்தா ஆயிட்டீங்க குட்டி சூர்யா சார் பொறக்கப் போறாரு வாங்க வாங்க என்று அனைவரையும் கூப்பிடுகிறார். மறுபக்கம் குடும்பத்தினர் கோபமாக உட்கார்ந்து இருக்க இதையெல்லாம் கவனித்த ரேணுகா உடனே அர்ச்சனா விற்கு போன் போடுகிறார் ஆனால் அர்ச்சனா கட் பண்ணிக் கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் ரேணுகா போன் பண்ண அர்ச்சனா எடுத்து எதுக்கு திரும்பத் திரும்ப போன் பண்றேன் என்று கேட்கிறார். நம்ம மோசம் போயிட்டோமா அந்த நந்தினி கர்ப்பமா இருக்கலாம் என்று சொல்ல அர்ச்சனா என்ன சொல்ற என்று டென்ஷன் ஆகிறார்.
அவள் ஆஸ்பிட்டல் போய் செக் பண்ணி இப்பதான் கன்பார்ம் பண்ணி இருக்காங்க அருணாச்சலம் ஐயா ரொம்ப சந்தோஷமா இருக்காரு என்று சொல்ல, அர்ச்சனா நீ நிஜமாதான் சொல்றியா எப்படி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல அவங்க ரூம்ல தனித்தனியா தான தூங்குறாங்க அப்புறம் எப்படி என்று கேட்கிறார். நீங்க என்னமா இப்படி கேக்குறீங்க அவங்க தான் ரெசார்டுக்கு போனாங்கள்ள என்று சொல்ல அதுதானா அடுத்த நாளே போயிட்டேனே என்று கேட்க அதற்கு முன்னாடி நாள் அவங்க மட்டும் தானே இருந்தாங்க என்று கேட்கிறார். அதுவும் இல்லாம நான் ரெசார்ட்ல அவகிட்ட விசாரிச்சேன் அவ அப்படியெல்லாம் இல்லன்னு சொன்னா என்று சொல்ல ரூம்ல ஒன்னா இருந்தாங்களா அப்ப நடந்திருக்கும் எனக்கு அப்படிதான் தோணுது அவங்க ஆஸ்பிட்டலில் இருந்து வருவாங்க வந்ததுக்கப்புறம் தெளிவா தெரிஞ்சுகிட்டு உங்களுக்கு போன் பண்றேன்னு என போனை வைக்க அர்ச்சனா கடுப்பாகிறார்.
சூர்யா மற்றும் நந்தினி இருவரும் காரில் வர கல்யாணம் பட்டாசை கொளுத்துகிறார். சந்தோஷத்துடன் சூர்யா இறங்கி வர சூப்பர் கல்யாணம் என்று சொல்லிவிட்டு, நந்தினிக்கு கார் டோர் திறந்து விட்டு வரவேற்கிறார். நந்தினி வேகமாக நடந்து வர மெதுவா வா நந்தினி என்று சொல்லுகிறார். அருணாச்சலம் ஓடிவந்து சூர்யாவிடம் கங்கிராட்ஸ் என சொல்லுகிறார். என் வாழ்க்கையிலே நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க சூர்யா என் மனசு நிறைஞ்சிருக்கு என்று சந்தோஷமாக பேசுகிறார். உடனே சுந்தரவல்லி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட சூர்யா சுந்தரவல்லி பார்த்து என் தங்கம் குட்டி நந்தினி கன்சிவா இருக்கிறது கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே நந்தினி அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வர, சூர்யா உன்ன தான் ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல அமைதியா இரு என்று சொல்லிவிடுகிறார். இன்னும் பத்து மாசம் டாடி அதுக்குள்ள இந்த வீட்ல ஒரு குட்டி பாப்பா வரப்போகுது என்று சந்தோஷப்பட்டு சொல்லுகிறார். இந்த குடும்பத்துல தினமும் வெட்டியா உட்கார்ந்துகிட்டு யார் குடும்பத்தை கெடுக்கணும்னு யோசிச்சுக்கிட்டு இருக்காங்க இல்ல அவங்க மேல உக்காந்து உச்சா போகவே ஒரு குட்டி பாப்பா வரப்போகுது என்று சொல்லிவிட்டு தங்கம் உள்ள போலாமா என்று நந்தினி தான் கேட்டுவிட்டு இதை இன்னும் செலிப்ரேட் பண்ணனும் டாடி என்று சொல்லி நந்தினியை இனிமேல் உன் கால் தரையிலேயே படக்கூடாது என்று சொல்லி தூக்கிச் செல்கிறார்.
பிறகு சூர்யா நந்தினியை தூக்கிக்கொண்டு மேலே வந்து ரூமில் விட அருணாச்சலம் சந்தோஷமாக சாமி கும்பிடுகிறார். இப்ப எதுக்கு நீங்க என்ன தூக்குறீங்க நீங்க எல்லை மீறி போறீங்க என்று கோபப்பட ரெசார்ட்லயும் அப்படித்தான் பண்றீங்க என்று சொல்லுகிறார். அப்போ உனக்கு கால்ல அடிபட்டுச்சு அதனால உனக்கு உதவி பண்ண அப்போ இது என்ன என்று கேட்க இது எனக்காக பண்ணிக்கிட்ட உதவி என்று சொல்லுகிறார். இதெல்லாம் உங்க அம்மாவ வெறுப்பேத்தறதுக்காக நீங்க பண்றீங்க எனக்கு இது சுத்தமா பிடிக்கல என்று சொல்ல அப்படி தூக்க பிடிக்கலைன்னா நான் இப்படி தூக்கவா என்று கட்டிப்பிடிக்க வருகிறார் இப்படி எல்லாம் பண்ணாதீங்க சார் என்று சொல்ல இனிமேல் பண்ண மாட்டேன் என்று சொல்ல, அப்படித்தான் சொல்லுவீங்க ஆனா திரும்பத் திரும்ப அதே தான் பண்றீங்க அது மட்டும் இல்லாம வீட்ல எல்லார்கிட்டயும் எதுக்கு கர்ப்பமா இருக்குறதா சொன்னீங்க அது அஜீரண கோளாறு தானே அங்க இருக்குறவங்க என்ன என்ன நினைப்பாங்க. அவங்க எல்லாம் ஒரு ஆளா அவங்க என்ன நெனச்சா உனக்கென்ன அவங்க தப்பு தப்பா நினைச்சு காண்டாகி வயிறு எரியட்டும் அதுக்காக தான் இதெல்லாம் என்று சொல்லுகிறார்.
என் டாடிய தவிர வேறு யாரு முகத்திலையும் சந்தோஷம் இல்லை அதுவும் என் தாய்க்குலன்ற பேருல ஒரு பெண் தெய்வம் இருக்கு அது முகத்தை பார்க்கணுமே அதுக்காகவே எத்தன பொய் வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று சொல்லுகிறார். எல்லாரையும் கஷ்டப்படுத்தி எதுக்கு இப்படி பண்றீங்க இதனால் உங்களுக்கு என்ன வரப்போகுது என்று சொல்ல அதற்கு சூர்யா என் வாழ்க்கையில அடிச்சவங்கள அவங்களை கொஞ்சம் வெறுப்பேத்த வேண்டாமா அதுக்குதான் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி நான் இப்பவே இந்த உண்மையை போய் வீட்ல சொல்ல போறேன் என்று சொல்ல சூர்யா நந்தினி தடுத்து நிறுத்தி எல்லாரையும் கொஞ்சம் டென்ஷன் பண்ணிட்டு அப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்ல உங்க அப்பா ரொம்ப பாவம் அவரை ஏமாற்றுவது உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா என்று சொல்லிவிட்டு நந்தினி நான் சொல்ல தான் போறேன் என்று சொல்லி கிளம்புகிறார். சொன்னா கேக்க மாட்டா ஜாலி மூடை கெடுத்துட்டா என சூர்யா குடிக்கிறார்.
உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு அவ பெத்துக்க போறது யாருடைய குழந்தை சூர்யாவோட குழந்தை அவ அந்த குழந்தையை பெத்தா இந்த குடும்பத்தோட வாரிசாகாதா என்று கோபப்படுகிறார். அவளை இந்த வீட்டு மருமகளே இல்லைன்னு சொல்றேன் ஆனா நீங்க இது எப்படி என்னால ஏத்துக்க முடியும் என்று சொல்ல அருணாச்சலம் இது அவங்களோட வாழ்க்கை உன்னோட ஆதங்கம் எனக்கு புரியுது இதெல்லாம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்லுகிறார். உனக்கு இதுல ஏதாவது விருப்பம் இருந்தா சூர்யா கிட்ட போய் பேசு என்கிட்ட பேசுறதுனால ஒரு பிரயோஜனமும் இல்ல என்று சொல்ல, சுரேகா நம்ம அவகிட்டயே பேசிக்கலாம் என்று சொல்ல நீ இன்னொரு வீட்டுக்கு வாழ போற பொண்ணு ஒழுங்கா பேச கத்துக்கோ என்று அருணாச்சலம் திட்டுகிறார்.நந்தினி கீழே இறங்கி வர நீ எதுக்குமா படிக்கட்டில் இறங்கி வர இந்த குடும்பத்தோட வாரிச சுமந்துகிட்டு இருக்க இப்படி கேரளசா இருக்க என்று சொல்ல இந்த வீட்ல இருக்கவே அவளுக்கு தகுதி இல்ல அத விட்டுட்டு வாரிச பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு பேச நந்தினி உண்மையை சொல்ல வர சுந்தரவல்லி எதுவும் பேச வேண்டாம் என தடுத்துக் கொண்டே இருக்க அவை எதையோ சொல்லவரா இரு கேட்கலாம் என்று சொல்ல நான் கர்ப்பமா இருக்குறதா எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க சூர்யா சார் என் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் கர்ப்பமா இருக்கிறேன் சொன்னது எல்லாம் பொய் என்று சொல்லுகிறார் இதனால் அருணாச்சலம் அதிர்ச்சி அடைய ரேணுகா நிம்மதி அடைகிறார். நான் கர்ப்பமாக இல்லை சூர்யா சார் தான் பொய் சொன்னாரு நான் ஆரம்பத்தில் இருந்து இதை சொல்லணும்னு நினைக்கிறேன் ஆனா என்னை யாருமே சொல்ல விடல, இப்ப கூட சூர்யா சார் இதை சொல்ல வேணாம்னு தான் சொன்னாரு. நான் அவர்கிட்ட சண்டை போட்டு வந்து உங்க கிட்ட சொல்றேன் என சொல்ல சுந்தரவல்லி சந்தோஷப்படுகிறார். உடனே அருணாச்சலம் கண் கலங்க இந்த விஷயத்தில என் மேல தப்பு இல்ல நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்டுவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் அர்ச்சனா எப்படி இது நடந்தது அதுவும் சூர்யா ஓட குழந்தை அவ வயித்துலயா என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல என்ற டென்ஷனாக யோசித்துக் கொண்டிருக்க ரேணுகா போன் போடுகிறார். என்னாச்சு அவ ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டாளா என்று கேட்க, வாசலில் பட்டாசு எல்லாம் என்று ஆரம்பிக்க அவ கர்ப்பமா இருக்கலாம் இல்லையான்னு மட்டும் சொல்லு என்று சொல்ல அவ கர்ப்பம் எல்லாம் இல்லை இப்பதான் அவளே வந்து சொல்லிட்டு போனா என்று சொல்ல எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு என்று சொல்லுகிறார். கர்ப்பமா இல்லாததற்கு எதுக்கு ஹாஸ்பிடல் போனா என்று சொல்ல, சூர்யா சார், அவங்க அம்மாவ வெறுப்பை தரத்துக்காக பண்ணியிருக்காரு என்று சொல்ல, இவ அம்மாவை வெறுப்பேத்த இவ்வளவு தூரம் போவானா இத வச்சு நான் ஒரு பிளான் பண்றேன் என்று சொல்லுகிறார். இருந்தாலும் இவங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. எப்போ எது வேணாலும் நடக்கலாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை இந்த வீட்டை விட்டு துரத்தனும் என்று அர்ச்சனா முடிவெடுக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி வீட்ல மாதவி அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நான் தான் காரணம் என்று அவங்க நினைக்கிறாங்க. மாதவியிடம் நந்தினி அம்மா உங்க கோபம் எனக்கு புரியுது என்று சொல்லு பேச வேணான்னு சொல்லிட்டல போயிடு என்று மிரட்டுகிறார்.
கல்யாணத்திடம் எதுவுமே தற்செயலா நடந்த மாதிரி இல்ல என்ன மாட்டி விட வேண்டும் என்று திட்டம் போட்டு செஞ்ச மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். சூர்யா சார்க் கோ மாதவி அம்மாவுக்கோ அவங்க நேரடியா போன் பண்ணி இருக்கலாம் நடுவுல நான் யாரு என்று கேட்க இதை ரேணுகா கேட்டுக் கொண்டிருக்கிறார் எதையெல்லாம் செய்றவங்க யாரு அவங்களுக்கு காணத தேவை என்ன என்று நந்தினி யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
