சூர்யா பேசிய பேச்சு, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் டாக்டர் வெளியே வந்து அவருக்கு ஷாக் ஆன விஷயம் எதாவது சொன்னீங்களா? என்று கேட்க இன்னைக்கு நடந்தது எல்லாமே அவருக்கு ஷாக்கான விஷயம்தான் என்று அருணாச்சலம் சொல்ல இப்போ நல்லா இருக்காரு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா இதுக்கு மேல அவருக்கு ஷாக் ஆன விஷயம் எதுவும் சொல்லாதீங்க தாங்க மாட்டார் என்று சொல்லிவிட்டு டாக்டர் கிளம்புகிறார். சரி நாம வெளிய போய் நிக்கலாம் வாம்மா என்று நந்தினி கூட்டிச்செல்ல நீங்களும் வாங்க என்று மாதவி மற்றும் மாதவியின் கணவரை கூப்பிட நாங்க இங்கேயே இருக்கோம்பா நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
நல்லவேளை இவன் மண்டைய போட்டுருவானு நினைச்சேன், அதுக்கு நீ என்ன பண்ண போற என்று கேட்க அவன் மண்டைய போட்டுட்டா என் தங்கச்சின்னு தான் முக்கியம்னு அவ போய்டுவா, நல்ல வேலை பொழச்சுட்டான் என்று பேசுகிறார். முதலில் இந்த சிங்காரத்தை டிஸ்சார்ஜ் பண்ணி அவங்க வீட்டுக்கு அனுப்பனும் ஏதாவது பிளான் பண்ணனும் என்று பேசிக்கொள்கின்றனர். நந்தினி அழுது கொண்டே இருக்க அருணாச்சலம் ஆறுதல் சொல்லுகிறார். காலைல இருந்து சாப்பிடாம மண்டபத்துல எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சிட்டு இருந்தாரு அதுக்கு அப்புறம் நடந்த விஷயம் எல்லாத்தையும் நினைச்சு அவரை ரொம்ப பிரஷர் ஆயிட்டு இருப்பாரு சரியாயிடுவாரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் தைரியமா இரு என்று சொல்லுகிறார்.
மீண்டும் நந்தினியிடம் இந்த இடத்துல இதை வச்சு பேசுறேன்னு தப்பா நினைக்காதே, தயவுசெய்து ஒரு ஆறு மாசம் ஆவது சூர்யா கூட இருமா, அவன் யார் கிட்ட எப்படி நடந்துக்கணும் குடி போதையில் இருந்து எப்படி வருவானு தெரியல அவனுக்கு இருக்கிற ஒரே விஷயம் அவங்க அம்மாவ பழி வாங்கணும் அவ்வளவுதான், அவன் இதுல இருந்து கொஞ்சம் வெளிய வரணும்னா உன்ன மாதிரி ஒரு பொண்ணு அவன் கூட இருக்கணும் என்று சொல்ல நந்தினி மன்னிச்சிடுங்க ஐயா நான் ஒரு கிராமத்து பொண்ணு உங்க வீட்டு வேலை செய்ய வந்தவ, நான் எப்படி வாழ முடியும் அதுவும் இல்லாம உங்க புள்ள இந்த தாலி டிஸ்டர்பா இருந்தா ஆங்கில்ல கழட்டி மாட்டிடுன்னு சொல்றாரு அப்படி இருக்கும்போது நான் எப்படி அவர் கூட வாழ முடியும்.அவரு அவங்க அம்மாவ பழிவாங்கணும் என்ற ஒரு விஷயத்துக்காக யார வேணா பழி வாங்குவார் யார் மனச வேணா கஷ்டப்படுத்துவாரு அப்படித்தானே என்று கோபப்படுகிறார்.
உடனே அருணாச்சலம் அவர் அவங்க அம்மா மேல இருக்கிற கோபத்துக்காக தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா அவ்வளவுதான் என்று சொல்ல, ஐயா நான் ஒன்று சொல்கிறேன் என்று தப்பா நினைக்காதீங்க நீங்களும் ரெண்டு பொண்ணு வச்சிருக்கீங்க நீங்க கல்யாணத்துக்கு போற இடத்துல அங்க உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டா நீங்க அப்படித்தான் வாழ சொல்லுவீங்களா இல்ல கூட்டிட்டு வருவீங்களா என்று கேட்கிறார். நன்றி உணர்வு என் மனசுல இப்பவும் இருப்பதால்தான் உங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் என்று நந்தினி சொல்கிறார். என் பையன் பண்ணத நான் சரின்னு சொல்லல, நீ எங்க வீட்ல மருமகளா இருக்கணும்னு ஆசைப்படறேன் ஆனா அதுக்கு அப்புறம் நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லுகிறார்.
ஆனால் நந்தினி நாங்க வாழ்கிற வாழ்க்கை வேற நீங்க வாழற வாழ்க்கை வேற என்னால இங்க ஒரு வாரம் கூட வாழ முடியாது. நாங்க தட்ல சாப்பிடுவோம் நீங்க ஸ்பூன்ல சாப்பிடுறீங்க நாங்க பாய் விரிச்சு தரையில் படுப்போம் நீங்க கட்டில் போட்டு அது மேல பெட்ல படுக்குறீங்க அதெல்லாம் எனக்கு செட்டாகாது ஒரு வாரமே என்னால இருக்க முடியாது நீங்க ஆறு மாசம் இருக்க சொல்றீங்க என்னால எப்படி முடியும் என்று அழுகிறார். உடனே மாதவியின் கணவருக்கு போன் போட்டு கேன்டினில் டீயும் பிஸ்கட்டும் வாங்கி வர சொல்லுகிறார். நந்தினி கிட்ட குடுப்பா என்று சொல்ல மாதவி உங்களுக்கு இல்லையா அப்பா என்று கேட்க எனக்கு இல்லம்மா நந்தினிக்கு தான் வாங்கிட்டு வர சொன்னேன்.
காலைல இருந்து எதுவுமே சாப்பிடல என்று சொல்ல முதலில் மறுத்த நந்தினி பிறகு அருணாச்சலம் டீ யில் பிஸ்கட் தொட்டு ஊட்டி விடுகிறார். இதைப் பார்த்து மாதவி கடுப்பாகிறார். உடனே அங்கிருந்து இருவரும் கிளம்பிச் செல்ல நந்தினி டீ பிஸ்கட் சாப்பிடுகிறார்.
டாக்டர் கூப்பிட்டு அவர் நல்லாயிருக்காரு அவருக்கு ஒன்னும் இல்ல ஷாக் விஷயம் மட்டும் சொல்லாதீங்க இப்ப போய் பாருங்க என்று சொல்லி உள்ளே அனுப்புகிறார். நந்தினி அப்பா என்று கூப்பிட பயந்துட்டியாடா என்று கேட்க ஆமாம்பா என்று சொல்ல இதுவரைக்கும் இப்படி இருந்ததில்லையேப்பா என்று கேட்கிறார் இந்த உடம்புக்கு ஒன்னும் ஆகாதமா என்று சொல்ல அருணாச்சலம் உனக்கு ஒன்னும் இல்ல சிங்காரம் என்று சொல்லுகிறார். மீண்டும் சிங்காரத்திடம் நந்தினியை ஒரு ஆறு மாசம் மட்டும் இருக்க சொல்லு என்று கெஞ்சி கேட்க அவடியை நிறுத்திட்டான அப்புறம் அவன் வாழ்க்கையாக அவன் பார்த்துப்பான் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி ஐயா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க உங்க பையன் குடிக்கறது தான் பிரச்சனைனா கூடிய நிறுத்த நிறைய இடம் இருக்கு அங்க கூட்டிட்டு போகலாமே என்று கேட்கிறார். என்ன மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சு தான் உங்க பையன திருத்தனுமா என்று கேட்க சிங்காரம் ஆத்தா, ஐயா கிட்ட போய் என்ன கேள்வி கேக்குற என்று கேட்க சிங்காரத்திடம் உன் பொண்ணு கேக்குறதுல தப்பு இல்ல என்று அருணாச்சலம் சொல்லுகிறார். நீ சொல்ற மாதிரியும் நாங்க சேர்த்தோம் ஆனால் எதுவுமே வேலைக்கு ஆகவில்லை, உன்ன திரும்பவும் ஆறு மாசம் கழிச்சு போ என்று எல்லாம் சொல்லலாமா ஒரு பொண்ணாலும் அவனுக்கு ஏற்பட்ட காயத்தை இன்னொரு பொண்ணாலும் சரி பண்ண முடியும் என்று நான் நம்புறேன் என்று சொல்லுகிறார். உடனே சிங்காரம் இதுக்கு மேல ஐயாவை கெஞ்ச விடாத, நீ ஆறு மாசம் தானே இங்கேயே இரு, இது கருப்பன் போட்ட முடிச்சாவே இருக்கட்டும் நீ அங்க வந்தேனா வாழாவெட்டியா இருக்குனு பேசுவாங்க, ஆறு மாசம் இரு அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு பாத்துக்கலாம் என்று நந்தினியிடம் சொல்ல சரிப்பா நான் சம்மதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மருமகளா இல்ல வேலைக்காரியா இருக்க என்று சொன்ன அருணாச்சலம் உடனே இங்கே இருக்கிறேன் என்று சொன்னதே போதுமா என்று சந்தோஷப்படுகிறார். சிங்காரத்தை அருணாச்சலம் வீட்டுக்கு கூப்பிட, இல்லை ஐயா நான் ஊருக்கு கிளம்புறேன். அங்க ரெண்டு பொம்பள பசங்க இருக்காங்க நான் போய் அவங்கள பாக்கணும். அனுசரிச்சு நடந்துக்கமா என்றும், ஏதாவது பிரச்சனைனா ஐயா கிட்ட சொல்லு அதுக்கு மேல நான் கருப்பன் பார்த்துப்பான் நான் ஊருக்கு கிளம்புறமா என்று சொல்லுகிறார்.
நீ சிங்காரத்துக்கு தைரியம் சொல்லி அனுப்புமா என்று நந்தினியிடம் சொல்ல அவர் நான் பார்த்துக்கிறேன் நீ தைரியமா போயிட்டு வாப்பா என்று அனுப்பி வைக்கிறார் வெளியில் வந்தவுடன் என்ன பா ஆச்சி என்று மாதவி கேட்க, நந்தினி நம்ம வீட்ல ஆறு மாசம் இருக்க சம்மதித்து அம்மா அவரை அனுப்பிட்டு நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். வீட்டில் கல்யாணம் வீட்டில் மாட்டி உள்ள டெக்கரேஷன் பூக்களை ஒரு ஆள் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். என்னையா பண்ணிக்கிட்டு இருக்க வேகமா எடு நாளைக்கு காலையில சுந்தரவல்லி அம்மா முழிச்சு பார்க்கும்போது இது கல்யாண நடந்த விழா இருக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க சீக்கிரமா எடு என்று எல்லாத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் அர்ச்சனா மண்டபத்தில் நடந்ததை நினைத்து குடித்துக் கொண்டு டென்ஷன் ஆக இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் எங்க அம்மாவ கடுப்பேத்த மட்டும் தான் கட்டுன அவ்வளவுதான் என்று சூர்யா சொல்லுகிறார்.
மறுபக்கம் மினிஸ்டர் என் பொண்ணு இன்னைக்கு மனசு உடைஞ்சி நிக்கிற அவள சரி பண்ண நான் என்ன வேணா செய்யவேன் என்று சொல்லுகிறார். நந்தினி சூர்யாவிடம் உங்க அம்மாவை வெறுப்பேத்த தெளிவா தெரிஞ்ச உங்களுக்கு என்று பேச ஆரம்பிக்கிறார் என்ன நடக்கும் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.