நந்தினியை அசிங்கப்படுத்த நினைத்த குடும்பத்தினர், சூர்யா கொடுத்த பதிலடி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 18-05-25
Moondru Mudichu Serial Today Promo Update 18-05-25

நேற்றைய எபிசோடில் நந்தினி வரும்போது கேட்டை மூடனும்னு உலக ஐடியாவை யார் கொடுத்தது என்று கேட்க அசோகன் உங்க அம்மா தான் மாப்பிள்ளை என்று சொல்லுகிறார். அடிக்கடி திருடன் வரதுனால நீங்க வர வரைக்கும் பூட்டி வைக்க சொன்னாங்க சரி அது ஓகே நந்தினி எதுக்கு வெளிய நிக்க வச்சீங்க போறப்ப ஒண்ணா போனீங்க திரும்ப வரும்போது ஒண்ணா வருவீங்கன்னு நினைச்சோம் என்று சொல்லுகிறார். ஓ நந்தினி மயங்கி கிடக்கிறத பார்த்து நீங்க ஷாக் ஆனீங்க அப்படித்தானே என்று கேட்க ஆண்ட ஸ்பாட்ல அடிச்சு விடுற யாரு உன் பொண்டாட்டி ட்ரெய்னிங்கா இல்ல இந்த குட்டி சாத்தான் ட்ரைனிங்கா என்று கேட்கிறார். இதையெல்லாம் நான் நம்பனுமா இங்க என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லவா என்று சுந்தரவல்லி சொல்லியதை அப்படியே சூர்யா சொல்லிவிட்டு நந்தினியை உள்ளே அழைத்து சென்று கதவை பூட்டி விடுகிறார். இவர்கள் கதவை தட்டியும் திறக்காமல் இருக்க பின்பக்கம் போக சூர்யா அந்த கதவையும் அடைக்கிறார். நந்தினி கதவை திறக்க போக உன்னை நிக்க வச்சாங்களா அவங்க இன்னைக்கு நைட்டு ஃபுல்லா நிக்கட்டும் அப்பதான் அந்த வலி தெரியும் என்று சொல்லுகிறார்.

அதெல்லாம் வேண்டாம் என்று நந்தினி சொல்ல, அவங்க என்ன செஞ்சாங்களோ அதை திருப்பி செஞ்சாதான் அவங்களுக்கு புரியும் நீ கதவை திறந்தா அவ்வளவுதான் என்று சொல்லி மிரட்ட,எனக்கு கிச்சன்ல வேலை செய்ய போறேன் என்று சொல்ல இப்ப என்ன கிச்சன்ல வேலை மேல போய் படு என்று அழைத்துச் சென்று விடுகிறார். உடனே அசோகன் ராத்திரி முழுக்க நம்ப இங்க தான் இருக்கணுமா ஏதாவது யோசிமா என்று சொல்லுகிறார். சுரேகா எல்லா அந்த நந்தினி ஓட அப்பாவால தான் சுரேகா சொல்ல, பிறகு மூவரும் வேறு வழியில்லாமல் வெளியில உட்கார்ந்து விடுகின்றனர். சுரேகா பயங்கரமா வேர்க்குது கொசு ஒன்னு ஒன்னு ஈ சைஸ்ல இருக்கு என்று சொல்லுகிறார்கள். நம்ம வேணா மாப்பிள்ளை கிட்ட கொசு பேட் கேட்கலாமா என்று சொல்ல,சுரேகா எனக்கு பசிக்குது என்று சொல்லுகிறார்.

பேசாம ஹோட்டல்ல ரூம் போட்டு தந்து விடலாமா என்று சுரேகா செல்ல மாதவியின் அப்பவே யோசிச்சேன் ஆனா நம்ம மூணு பேரோட போன் பர்ஸ் எல்லாமே வீட்டுக்குள்ள தான் இருக்கு என்று சொல்லுகிறார். நந்தினி ரூமில் அமைதியாக நிற்க சூரியா குடிக்க ஆரம்பிக்கிறார். வெளிய கொசு கடிக்கும் சார் அவங்களுக்கு வெளியே இருந்து பழக்கம் இல்லை என்று சொல்ல நீ அவங்கள பத்தி இவ்வளவு யோசிக்கிற ஆனா ஒரு நிமிஷமாவது அவங்க உன்ன பத்தி யோசிச்சாங்களா நல்லவளா இரு ஆனா ரொம்ப நல்லவளா இருக்காத இந்த உலகத்துல வாழவே முடியாது. ஒரு கன்னத்துல அடிச்சா பதிலுக்கு ரெண்டு கன்னத்துல அடிக்கணும் இல்லன்னா ஏறி மிதிச்சுட்டு போடுவாங்க என்று சொல்லுகிறார்.

நீ போய் தூங்கு நான் பாத்துக்குறேன் என்று சொல்ல, விஜி அக்கா வீட்ல போய் வேலை செய்யறது அவங்களுக்கு புடிக்கல அதனாலதான் இப்படி பண்றாங்க என்று சொல்ல அதற்கு ரோட்ல தள்ளிடுவாங்களா அந்த தாய் கிழவி தான் அப்படி சொன்னா இவங்க மூணு பேரும் பண்ணுவாங்களா என்று சொன்ன நாளைக்கு உங்க அம்மா வந்தா பிரச்சனை ஆயிடும் என்று சொல்ல என்ன பிரச்சனை இருந்தாலும் நான் பாத்துக்குறேன் என்று சூர்யா சொல்லுகிறார். நந்தினி அவ்வளவு சொல்லியும் சூர்யா கேட்காததால் நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன் நீ போய் படு என்று சூர்யா சொல்ல அந்த நேரம் பார்த்து விஜி போன் போட்டு எனக்கே முழிப்பு வந்து உடம்பெல்லாம் வலிக்குது உனக்கு வலி எப்படி இருக்கு என்று கேட்க வலி எல்லாம் அப்படியேதான் இருக்கு அதுக்குள்ள என்னென்னமோ பிரச்சனை நடக்குது நான் நாளைக்கு சொல்றேன் என சொல்லிவிட்டு ஹோட்டல் காரர் என்ன சொன்னாரு என்று கேட்க நாளைக்கு தான் நந்தினி தெரியும் என்று சொல்லிவிட்டு தூங்கச் சொல்கிறார். விஜி என்ன சொல்றா என்று கேட்க ஏதோ வலி ஐஸ் எல்லாம் கேட்டுச்சு அடிபட்டுச்சா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் என்று சொல்ல,சரி நீ போய் தூங்கு என சொன்னவுடன் நந்தினியும் படுக்கப் போக மீண்டும் நந்தினி அவர்களை உள்ளே கூப்பிடச் சொல்ல சூர்யா நீ தூங்கு என சொல்லி விடுகிறார்.

மறுபக்கம் மூவரும் கொசுக்கடியில் படுத்து கொண்டிருக்க விஜி நந்தினிக்கு ரத்தக்கட்டு இருந்தா சும்மா விடக்கூடாது ஐஸ் ஒத்தடம் கொடுத்துட்டு படு என்று சொல்லி வாய்ஸ் நோட் அனுப்ப சூரியா போன் சத்தம் கேட்டு வந்து விஜய் அனுப்பியதை கேட்டு விட்டு ஐஸ் தண்ணீரில் நந்தினியின் கையை வைக்க வலியில் நந்தினி அலறி அடித்து எழுந்து கொள்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Moondru Mudichu Serial Today Promo Update 18-05-25
Moondru Mudichu Serial Today Promo Update 18-05-25