சூர்யா எடுத்த முடிவு, சம்மதிப்பார நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 17-08-25
moondru mudichu serial today promo update 17-08-25

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினிக்கு தாலி கட்ட அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்கின்றனர். இனிமேல் நீ வாழ்க்கையில் சந்தோஷமா இரு, தைரியசாலியா இரு என்று கெஸ்ட் ஆக வந்திருக்கும் வடிவுக்கரசி சொல்லுகிறார். உனக்கு சந்தோஷம் தான சுந்தரவல்லி என்று கேட்க சூர்யா அம்மா ரொம்ப ஹாப்பி அவங்க முகத்தைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியலையா என்று சொல்லுகிறார். உடனே நந்தினி வந்திருப்பவர்களுக்கு கிப்ட் கொடுத்து அனுப்புகிறார். பிறகு சுந்தரவல்லி இடம் வந்து இருக்கும் கெஸ்ட் உனக்கு நந்தினியை சுத்தமா புடிக்கல அது உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. இந்த காலத்துல இது மாதிரி பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை வருவது வழக்கம்தான். அவளை அறவணச்சு அன்பா பாசமா இருந்தாலே எந்த பிரச்சனையும் வராது.

நான் இப்ப சொல்றேன் நீ எழுதி வச்சுக்கோ நீ அருவருப்பா பாக்குற நந்தினி நீ அண்ணாந்து பார்க்கிற மாதிரி கொடி கட்டி பறப்பா நீ அதை பாப்ப என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவிடம் உனக்கு பொக்கிஷம் மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சிருக்கா நீ யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்ல சூர்யாவும் சரின்னு சொல்லுகிறார். நீங்க ரெண்டு பேரும் வாழ்நாள் ஃபுல்லா சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு அருணாச்சலம் நந்தினியை கூப்பிட்டு நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கல, தாலி கட்டப் போகும் விஷயத்தை நான் உன்கிட்ட சொல்லிட்டு தானே செஞ்சோம் அப்பவே நீ வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் அதை விட்டுட்டு கடைசி நேரத்தில் ரூம்ல போய் உக்காந்துக்கிட்டா என்ன அர்த்தம் என கேட்கிறார். சந்தோஷமா நடக்க வேண்டிய நிகழ்ச்சி சங்கடப்பட வச்சுட்டியேம்மா என் மேல வச்சிருந்த மரியாதைக்கு ரொம்ப நன்றி என வருத்தப்பட்டு செல்கிறார்.

சூர்யா ரூமில் இருக்க நந்தினி வந்தவுடன் நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நந்தினி. உண்மையை சொல்லுவியா என்று கேட்கிறார். சொல்லுங்க சார் என்று சொல்ல நான் உனக்கு திடீர்னு தாலி கட்டியிருக்கலாம். ஆனால் இந்த வீட்டில் நீ இருக்கிற ஒவ்வொரு நாளும் உனக்காக தான் பேசியிருக்க உனக்காக தான் யோசிச்சிருக்கேன். உனக்கு தாலி கட்டுற விஷயம் முன்னாடியே தெரியும் இல்ல, அப்பவே சொல்லி இருக்கலாமே என்று சொல்ல நான் ஐயா கிட்ட சொன்னேன் என்று சொல்லுகிறார். நீ வேண்டான்னு தான் சொல்லி இருப்ப ஆனா அவரு அழுத்தமா சொன்னவுடனே நீ சரின்னு சொல்லி இருப்பேன் அப்படித்தானே என்று கேட்க நந்தினி அம்மா என்ன சொல்லுகிறார் நீ சரின்னு சொன்னதுக்கு அப்புறம் ஒரு விஷயத்தை செய்யாம இருந்தது கிடையாது கடைசி நிமிஷத்துல யார் சொல்லி நீ மாறின இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்று கேட்க யாரும் காரணம் இல்லை என்று சொல்லுகிறார். கன்ஃபார்மா நீ பொய் தான் சொல்ற யார் சொல்லி அங்க இருந்து வந்த சொல்லு என்று கேட்கிறார். எனக்கு சொந்த புத்தி இல்லையா என்று கேட்க உனக்கு சொந்த புத்தி இருக்கு அதையும் தாண்டி சகிப்புத்தன்மையையும் இருக்கு என்று சொல்லுகிறார். உன்னை இந்த வீட்டில் வேணும்னே அசிங்கப்படுத்துறாங்க, எல்லாத்துக்கும் நீ சகிச்சுக்கிட்டு போய்கிட்டு இருக்க எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கு என்று சொல்லுகிறார்.

இந்த விஷயத்தை இதோட விட்டுடுங்க என்று சொல்ல, அப்படியெல்லாம் விட முடியாது என்று சூர்யா சொல்லுகிறார். உன்னை யார் இப்படி மிரட்டி கிட்டு இருக்காங்கன்னு எனக்கு எல்லாமே தெரியும் ஆனா உன்னோட வாயிலிருந்து வரணும்னு தான் நான் கேட்கிறேன் என்று சொல்லுகிறார். என்னை யாரும் எதுவும் சொல்லல நானே தான் இப்படி பண்ணினேன் என்று சொல்லிவிட்டு நந்தினி வந்துவிடுகிறார். கிச்சனுக்கு வந்தவுடன் கல்யாணம் நந்தினி அழுது கொண்டிருப்பதால் என்னாச்சும்மா என்று கேட்கிறார். நான் இனிமேல் அழ மாட்டேன் என்று சொல்ல, நீ என்ன நடந்துச்சுனு நீ அருணாச்சலம் ஐயா கிட்ட சொல்லி இருக்கலாம் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் அமைதியாக வந்து நிற்கிறார். முதல்ல எனக்கு விருப்பம் இல்லனாலும் ஐயா சொன்னதுனால நான் தாலி கட்டிக்க சம்மதிச்சேன் ஆனா அதுக்கு அப்புறம் சுந்தரவல்லி அம்மா நீ வரலட்சுமி பூஜை நடக்கும்போது நீ இங்கே இருக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதனாலதான் போயிட்டேன் என்று சொல்லுவதை அருணாச்சலம் கேட்டு விடுகிறார்.

அவங்க இந்த வீட்டுக்கு தான் வருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அந்த காரில் ஏறி இருக்க மாட்டேன் என சொல்லுகிறார். சரி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் எதுக்கு ரூமுக்குள்ள போய் உட்கார்ந்து கொண்டிருந்த என்று கேட்க அவங்க அவ்வளவு சொன்னது இல்லாம கண்ண காமிச்சு வேற இருக்கக் கூடாதுன்னு சொன்னாங்க அதனாலதான் போயிட்டேன்னு சொல்ல நீ இது சின்னையா கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே என்று கேட்க சொல்லிட்டு இதை ஒரு பிரச்சனையாக்கவா என்று கேட்கிறார். எனக்கு சூர்யா சார் பேசுனது கூட கஷ்டமா இல்ல அருணாச்சலம் ஐயா பேசினது தான் ஈர கொலையை அறுத்து போட்ட மாதிரி இருந்தது என்று சொல்லி வருத்தப்பட அருணாச்சலம் கேட்டு அமைதியாக இருகிறார். மறுபக்கம் சூர்யாவும் விவேக்கும் தனியாக சந்தித்து தாலி கட்டுற விஷயம் நந்தினிக்கு தெரிந்தும் அமைதியாக இருந்தா ஆனா தாய்குலம் நடுவுல ஏதோ ஒன்னு பண்ணி இருக்காங்க. நான் இல்லாத அப்போ அவள போட்டு ஏவிய மெரட்டிகிட்டு இருக்காங்க என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்குற என்று சொல்ல ஒரு பிரச்சனையா இருந்தா சொல்லுவா கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருந்தா எப்படி சொல்லுவா என்று விவேக் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவிடம் வந்து நந்தினி உங்க கை நல்ல ஆயிடுச்சு இல்ல எந்த பிரச்சனையும் இல்ல என்று கேட்க சூர்யா ஆமாம் என்று சொல்ல, அப்போ கையெழுத்து நீங்களே போடுங்க என்று சொல்ல இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ தான் சைனிங் அத்தாரிட்டி என்று சொல்லிவிடுகிறார்.

சூர்யா,விவேக்கிடம் என்னைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம் என்று கேட்க எல்லாமே ஆன்லைன்ல பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, சூர்யா சூப்பர் என சொல்லுகிறார். மறுபக்கம் அருணாச்சலம் நந்தினியை சந்தித்து உனக்கும் சூர்யாவுக்கும் நடந்த கல்யாணத்தை முறைப்படியா ரிஜிஸ்டர் பண்ண சூர்யா ஏற்பாடு பண்ணியிருக்கான் என சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 17-08-25
moondru mudichu serial today promo update 17-08-25