நந்தினி மீது பாசமாக நடந்து கொள்ளும் சூர்யா, கடுப்பாகும் சுரேகா மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் ,அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் இது உங்க வேலை தானா என்று கேட்க பிராமிஸா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இது உன்னோட லக்ல கிடைச்சது என்று சொல்லுகிறார்.
பிறகு காய்கறி கூடையுடன் ஆட்டோவில் வந்து இறங்கிய நந்தினி பார்த்த சுரேகாவும் மாதவியும் சூர்யா இது என்னோட வீடு நீங்க ரெண்டு பேரும் வெளியே போங்கன்னு சொன்னா என்ன பண்ணுவோம் என்று கேட்கிறார். கல்யாணத்திடம் திடீர்னு காய்கறி கடையை பார்த்தவுடன் ரொம்ப ஜாலி ஆயிட்டாரு எல்லாத்தையும் வாங்கிட்டாரு என்று பேசிக்கொண்டிருக்க, சுந்தரவல்லி கூடையோடு எல்லாத்தையும் தூக்கி விசிறி அடிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.