பத்திரிக்கையை படிக்கும் சூர்யா, நந்தினிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் பங்காளிகள் அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். நீங்க ஒரு ஆள் தான் நம்ம ஊர்ல இருந்து வந்து இங்க இவ்வளவு பெரிய ஆளா இருக்கீங்க என்று சொல்ல அதுக்கு நான் மட்டும் காரணம் இல்லை முழு காரணம் சுந்தரவல்லி தான் அதனால சொல்லிவிட்டு சாப்பிட அழைத்துச் செல்கிறார். பிறகு நந்தினி அனைவரையும் உட்கார வைத்து சாப்பாடு பரிமாற அசோகன் என்ன எல்லாமே வெஜ் இருக்கு என்று சொல்ல அருணாச்சலம் இது மாதிரி பத்திரிக்கை வைக்க வரவங்களுக்கு வெஜ் தான் செய்வாங்க என்று சொல்லுகிறார். ஆனால் சுந்தரவல்லி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க விருந்தாளி நபர் ஏன் பேச மாட்டேங்கறீங்க என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.
உடனே நந்தினி ஊரிலிருந்து செடி கொடிகளை பற்றி விசாரிக்க சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது. வந்தவர்கள் நந்தினியின் சமையலை பாராட்டி பேசுகின்றனர். இவ்வளவு பெரிய வீட்டுக்கு மருமக என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குமா. இதுல உன்னை விட அக்கா செய்ததுதான் பெரிய விஷயம் வீட்ல தோப்புல வேலை செஞ்சா வேலைக்காரங்களோட மகள மருமகளா ஏத்துக்கிற மனசு யாருக்கு வரும் என்று பேசிக்கொண்டே போக சுந்தரவள்ளியால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உடனே கிச்சனுக்கும் கல்யாணத்தை கூப்பிட்டு நீங்களே பரிமாறுங்க அவங்க என்ன பாத்தா ஏதேதோ பேசிக்கிட்டே இருக்காங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மேலே இருந்து கீழே வந்த சுரேகா ஏய் நந்தினி என மரியாதையில்லாமல் கூப்பிட்டு பாத்ரூம் பக்கெட் கழுவ சொன்னனே கழுவலையா என்று கேட்டு கோபப்பட வந்த பங்காளிகள் ஒன்றும் புரியாமல் பார்க்கின்றனர். பிறகு சாப்பிட்டு வெத்தலை பாக்கு போட சாப்பாடு எல்லாம் அருமையா இருந்துச்சு என்று பேசிவிட்டு பத்திரிக்கையை கொடுக்க தயார் செய்ய அருணாச்சலம் ஆனது ஆச்சு சூர்யா வந்துவிடட்டும் என்று சொல்லி சூர்யாவிற்கு ஃபோன் போட இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துவிடுவேன் டாடி என போனை வைக்கிறார். சூர்யா தம்பி வர வரைக்கும் நான் போய் ஊருக்கு கார பொண்ணு கிட்ட பேசிட்டு வரேன் என்று போகிறார். நந்தினி கிச்சனில் பாத்திரம் கழுவ நீ எதுக்குமா கழுவிக்கிட்டு இருக்க நான் செய்றேன் என்று சொல்ல நீங்க வேற வேலை செய்யுங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஊர்க்கார பெண் வருகிறார்.
அவரிடம் வந்து இவ்வளவு வேலைக்காரங்க இருக்கும்போது நீ எதுக்கு இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க கேட்க, தப்பா நினைக்காத நீ இங்க நல்லா தானே இருக்க சந்தோசமா தானே இருக்க என்று கேட்க நந்தினியின் கண் கலங்கிக்கொண்டே நல்லா தான் இருக்கேன் அக்கா என்று சொல்ல அது உன்னோட நாத்தனார் தானே அந்தப் பொண்ணு என்ன ஏன்னு கூப்பிடுது இங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க நீங்க ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குதுன்னு சந்தோஷப்பட்டன் என்று சொல்ல, எந்த பிரச்சனையை விடுங்க அக்கா இது ஊர்ல யாருகிட்டயும் எதுவும் சொல்லாதீங்க என்று சொல்ல நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல நான் சந்தோஷமா தான் இருக்கேன் என்று சொல்லிவிட்டு பத்திரிக்கை வைக்க தாம்பூலம் தட்டு கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் சூர்யாவும் வந்துவிட அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு பத்திரிக்கையை வைக்க ஏற்பாடு செய்து சுந்தரவல்லி மற்றும் அருணாச்சலத்திடம் கொடுக்கின்றனர். உடனே இன்னொரு பத்திரிக்கையில் சூர்யா ,நந்தினி என எழுதுகிறார்.
இருவரும் சூர்யா மற்றும் நந்தினியை கூப்பிட்டு தனியாக நிற்க வைத்து கொடுக்க, அருணாச்சலம் அவனுக்கு எதுக்கு தனியா கொடுக்கணும் என்று சொல்ல கல்யாணம் ஆயிட்டாலே தனியா கொடுத்தாதான் பொறுப்பு வரும் என்று சொல்ல உடனே சூர்யா ஆமா ஆமா அப்பதான் பொறுப்பு வரும் இந்த வீட்டிலே பொறுப்பா இருக்கிறது என் பொண்டாட்டி தான் என்று சொல்லி நந்தினியை கூப்பிட்டு பத்திரிக்கையை வாங்குகிறார். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும் என்று சொல்ல நானும் என் பொண்டாட்டியும் கண்டிப்பா வந்துடுவோம் என்று சொல்லுகிறார். அவர்கள் கிளம்பிய வேகத்தில், சுந்தரவல்லி இதுக்கு தான் அவங்க ஊர்ல இருந்து வந்தாங்களா இதுக்கு தான் நாங்க வெளியே போகாம காத்துகிட்டு இருந்தமா என்று கோபப்படுகிறார். ஏன் இதே வீட்ல தானே மாப்பிள்ளையும் பொண்ணு இருந்தாங்க அவங்களுக்கு கொடுக்கல இவங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்குறாங்க அதுவும் அந்த பொம்பளை ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கா எனக்கு அவ்ளோ கோவம் இருந்தது இந்த பத்திரிகை இவ பேரு அந்த பத்திரிக்கையில் என் பெயர் என்ன அப்ப நானும் அவளும் ஒண்ணா என்று கோபப்பட்டு பேசிக் கொண்டே இருக்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா என்று நந்தினி பேச வர சூர்யா நான் பேசுகிறேன் நந்தினி என்று சொல்லுகிறார்.நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் உங்கள ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பத்திரிக்கை கொடுத்தாங்க அது மாதிரி தான நானும் நந்தினி அதனால அப்படி கொடுத்தாங்க என்று சொல்லுகிறார்.
வரவர லாஜிக்கே இல்லாம டென்ஷன் ஆகறாங்க எனக்கு இப்பல்லாம் கோவம் வரத விட சிரிப்பு தான் வருது. உடனே சுந்தரவல்லி இதுக்கு மேல உங்க ஊர்ல இருந்து எவனா பத்திரிகை வைக்க வந்த அவ்வளவுதான் என சொல்லிவிட்டு கோபமாக சென்று விடுகிறார். உடனே கோபமாக ரூமுக்கு வந்த நந்தினி இவங்களுக்கு எதுக்கு இந்த வேலை குடும்பத்துக்கு ஒரு பத்திரிக்கை கொடுத்தா போதாதா தேவையில்லாத பிரச்சனை என்று புலம்பிக் கொண்டிருக்க சூர்யா இப்ப என்ன நடந்துச்சு அவங்க பண்ணதும் சரிதானே என்று சொல்ல, இருக்கிற பிரச்சினையை நீங்க பெருசாகிறாதீங்க என்று சொல்லுகிறார். உன்னோட ஊர் காரு வந்தாலும் நீ சந்தோசம் தானே படுவ என்று சொல்ல அவங்கதான் செய்ய வேண்டியது செஞ்சிட்டு போயிட்டாங்களே என்று டென்ஷன் ஆகிறார். உடனே சூர்யா சரி நான் கல்யாணம் பத்திரிக்கை படிக்கிறேன் என சொல்லி அதில் பெயரும் பக்கத்தில் நாடுகளின் பெயர்கள் இருக்க எதுக்கு இப்படி போட்டு இருக்காங்க என்று கேட்க ஏன் உங்களுக்கு தெரியாதா அவங்க அந்தந்த இடத்துல வேலை செய்றாங்கன்னு அர்த்தம் கல்யாண பத்திரிக்கல அவங்க எங்க வேலை செய்றாங்கன்னு போடுவாங்க கௌரவம் மரியாதைக்காக இப்படி செய்வாங்க, அப்போ படிக்காதவங்க ஃபாரின்ல இருந்தா மரியாதையா என்று கேட்டு யோசிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி பெயரில் பத்திரிக்கை வைத்ததற்கே சுந்தரவல்லி உச்சகட்ட கோபமாக இருக்க சூர்யா பத்திரிக்கை படிக்க சூர்யா நந்தினி தலைமையில் கல்யாணம் என்று எழுதி இருக்கிறது.
இதனால் நந்தினி ஏற்கனவே என் பேர் பத்திரிக்கையில எழுதிக் கொடுத்ததே பிரச்சனை ஆயிடுச்சு இதுல என் தலைமையில கல்யாணம்னா என்ன பிரச்சனை நடக்க போகுதோ என்று அதிர்ச்சையாகிறார்.அவளை இந்த ஊர் உலகமெல்லாம் என்னோட மருமகன்னு சொல்றத என்னால தாங்கிக்க முடியல என்று சுந்தரவல்லி கோபப்பட்டு பேசுகிறார். பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
